பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது - பாகிஸ்தான் நீதிமன்றம்
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜ துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஆனால் தன் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அரசியலைப்பு சட்டத்தை பின்பற்றி அமைக்கப்பட்டவில்லை எனக்கோரி முஷாரஃப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த திங்கள்கிழமை, இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், முஷாரஃபுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் மூலம், முஷாரஃப் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார் என வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
இருந்த போதும், இந்த வழக்கை மற்றொரு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க முடியும் என பிபிசி உருது சேவை தெரிவிக்கிறது.
2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வரும் முஷாரஃப் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று, ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபிற்கு ராஜ துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
0 comments :
Post a Comment