விமானம் உடைந்து வீழ்ந்ததில் விமானப்படை வீரர்கள் நால்வர் பலி! (படங்கள் இணைப்பு)
ஹபுத்தளை, தம்பபிள்ளை தோட்டத்திற்குள் உடைந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள விமானம், இலங்கை வான் படைக்குச் சொந்தமான Y-12 விமானம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமானப் படை உறுதியளித்துள்ளது.
விபத்தில் சிக்கிய விமானப்படையைச் சேர்ந்த நால்வர் இறந்துள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆய்வொன்றிற்காக வீரவில விமானப்படை முகாமிலிருந்து ஹபுத்தளை வரை பயணித்தபோதே இந்த விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
விமானம் உடைந்து வீழ்ந்ததனால் அருகில் இருந்த வீடொன்றிலிருந்த பெண்ணொருத்தி அதிர்ச்சியடைந்துள்ளதனால், வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விபத்தில் கண்டியைச் சேர்ந்த விமானி புத்திக வீபெத்த, உதவி விமானி லெப்டினன் குலதுங்க, கண்காணிப்பு அதிகாரிகளான குமார, ஹெட்டியாராச்சி ஆகியோரே இன்றைய விபத்தில் உயிரிழந்திருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

0 comments :
Post a Comment