Sunday, January 12, 2020

கோத்தா, மகிந்த, மைத்திரி, ரணில், சஜித் ஒரே மேசையில் ஒன்றாக என்னதான் பேசினார்கள்?

கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் மகளின் திருமணத்தில் இவர்கள் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது இவர்களின் கலந்துரையாடல்அரசியல் சார்ந்ததாக இருந்ததாகத் தெரியவருகின்றது.

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு குறித்து மற்றுமொரு மேசையில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது.

ரஞ்சன் தொடர்பிலான பேச்சுவார்த்தை தொடர்ந்தால், அது குடும்பங்களுக்குள் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்றும், பின்னர் குடும்பப் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கவே காலம் சென்றுவிடும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சிரித்தபடி கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com