Monday, January 13, 2020

சஜித், சஜித் வாஸுக்கு ஐதேகவின் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்போகிறாராம்!

சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் உருவாக்கப்படுகின்ற புதிய அரசியல் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

சஜித் வாஸ் குணவர்த்தன என்பவர் சென்ற ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தின் மிக முக்கிய ஒருவராகச் செயற்பட்டவராவார். வெளிவிவகார அமைச்சில் ஆய்வுமேற்கொள்ளும் பா.உறுப்பினராகவும் செயற்பட்டார். அக்காலகட்டத்தில் அவருக்கு எதிராக பல்வேறு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், 2015 ஆம் ஆண்டின் பின்னர், அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.

எவ்வாறாயினும் சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் வாஸ், சஜித் பிரேமதாசவிற்காக மிகத் தீவிரமாக செயற்பட்டார்.

அத்துடன் சஜித் பிரேமதாசவின் புதிய கட்சியில் கொழும்பு மாவட்டத்தின் தலைமையை சுஜீவ சேனசிங்கவிற்கும், கம்பஹா மாவட்டத் தலைமையை ஹரீன் பிரனாந்துவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தலைமைப் பதவியை அஜித் பீ. பெரேராவுக்கும் வழங்குவிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

அவர்கள் மூவரும் அவ்வவ் மாவட்டங்களில் அதிக விருப்பு வாக்குகள் மூன்று இலட்சம் வீதம் பெற முடியும் என வாக்களித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com