Saturday, January 4, 2020

மகிந்த தேசப்பிரிய மன்னாருக்கு விஜயம்

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று சனிக்கிழமை (4) காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்தார்.

கடந்த வருடம் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் தொடர்பாகவும் அதே நேரத்தில் குறித்த தேர்தலோடு பணியாற்றிய அதிகாரிகளை சந்திக்கும் முகமாகவும் குறித்த விஜயம் அமைந்திருந்தது.

ஜனாதிபதி தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்ற விடயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அதனை முழுமைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் இடம் பெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் அதே போன்று மாகாணசபைத் தேர்தல் தொடர்பான விபரங்களையும் அது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக கொடுத்து சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் அத்தியட்சகர் ஜெனிற்றன் , மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com