காதலனால் ஏமாற்றப்பட்ட மகள் தற்கொலை சோகத்தில் தனக்கு தானே தீ மூட்டிய தாயும் உயிரிழப்பு
காதலனால் ஏமாற்றப்பட்ட மகள் தூக்கில் தொங்கி உயிரிழந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தனக்கு தானே மண்ணெணெய் ஊற்றி எரிகாயத்துக்குள்ளான நிலையில் 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த மகேஸ்வரன் தபேஸ்வரி(வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கடந்த 8 ஆம் திகதி மீட்கப்பட்டார்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் கொக்குவில் கிழக்கை சேர்ந்த மகேஸ்வரன் கஜானி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்தார்.
தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற பேரப் பிள்ளையை காணாத பாட்டி , வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மன விரக்தியில் மிகவும் சோகமாக காணப்பட்ட தாயார் தனது மகள் உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாமல் அறையினை பூட்டி விட்டு அவரும் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீயில் எரிவதை கண்ட யாழ்ப்பாணம் பொலிஸார், அறையின் கதவினை உடைத்து தீயினை கட்டுப்படுத்தியதுடன், உடல் முழுவதும் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான தாயையும் மீட்டு அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்தனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
0 comments :
Post a Comment