உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டோம் - ஈரானிய இராணுவம்
உக்ரைன் பயணிகள் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் பொறுப்பாக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது, இந்த விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.
0 comments :
Post a Comment