Tuesday, January 7, 2020

மாதாந்தம் 87 இலட்சம் வாடகைக்கு மங்கள வீடு வாங்கியது அம்பலத்திற்கு!

அரச நிர்ணய விலையை விடவும் இரு மடங்குத் தொகையை நிர்ணயம் செய்து, தேசிய லொத்தர் சபைக்காக கோட்டை முதலிகே மாவத்தையிலுள்ள கட்டடம் ஒன்று வாடகைக்கு வாங்கியது தொடர்பில் நிதியமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.

மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்த காலத்திலேயே இந்தக் கட்டடம் பெறப்பட்டுள்ளதாகவும், அதனது மாதாந்த வாடகை எண்பத்து எழு இலட்சம் எனவும் கூறப்படுகின்றது.

புதிய அரசாங்கத்தின் நிர்ணய விலையை விடவும் இரு மடங்கு உள்ளதாகவும் தேசிய லாெத்தர் சபையின் புதிய தலைவர் சட்டத்தரணி பியும் பெரேரா தெளிவுறுத்தியுள்ளார்.

 தேசிய லொத்தர் சபைக்கான புதிய கட்டடம் நிர்மாணிப்பதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை மீண்டும் திறைசேரிக்கு வழங்கி, இந்தக் கட்டடம் வாடகை முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வாடகைக் கட்டடத்திற்கு மாத வாடகை வழங்கப்படுகின்ற காசோலையில் நேற்று முன்தினம் புதிய தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அவர் அந்தக் காசோலையில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment