Saturday, January 4, 2020

ரணிலை விரட்டுவதற்காக மலிக் வீட்டில் ஒன்று கூடிய யானைக்குட்டிகள்..

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐம்பத்து இரண்டு பேர் நேற்று (03) இரவு மலிக் சமரவிக்கிரமவின் வீட்டில் ஒன்றுகூடி விஷேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.

தற்போது கட்சித் தலைமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் நீண்ட நேரம் அங்கு கலந்துரையாடியுள்ளனர். கட்சித் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகாது விட்டால், அதற்கு எதிராக செயற்படுவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.

அங்கு ஒன்றுகூடிய பா.உ உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, 'ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகாது விட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வேறாகக் கூட்டணியமைத்து போட்டியிடுவோம்' எனத் தீர்மானம் எடுத்துள்ளனர்.

மேலும் இந்த விடயத்தை ரணில் விக்கரமசிங்கவுக்குத் தீர்மானித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com