Saturday, January 18, 2020

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா 50 மில்லியன் டொலர் நிதி வழங்குகிறது

இலங்கை இராணுவத்திறக்கு 50 மில்லியன் ரூபா நிதியை இந்தியா வழங்கவுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இதன் போது இக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான ஒத்துழைப்புஇ சமூத்திர பாதுகாப்புஇ இரு நாட்டு கடலோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்தும் இலங்கைஇ இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான சமூத்திர வலயம் அதன் முக்கியதுவம்; குறித்தும் கவனம் செலுத்துப்பட்டுள்ளதோடு


அதேபோல் இரகசிய தகவல்களை திரட்டும் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ தளவாடங்களை கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவும் இந்தியா முன் வந்துள்ளது



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com