Thursday, January 23, 2020

ஊரவனின் காணியை 5 கோடிக்கு விற்ற றிசார்டின் சகோதரனுக்கு விளக்கமறியல் !

தலைமன்னார் பிரதேசத்தில் நபரொருவருக்கு சொந்தமான சுமார் 78 ஏக்கர் காணியினை போலி ஆவனங்களை தயாரித்து நிறுவனம் ஒன்றிற்கு விலைக்கு விற்றதான குற்றச்சாட்டில் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீனை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் அஜர்படுத்தப்பட்டபோது அவர் சார்பாக ஆஜரான பிரபல சட்டத்தரணி, காலிங்க இந்ததிஸ்ஸ, தனது கட்சிக்காரர் இந்த குற்றச்செயலுடன் தொடர்பு கொண்டமைக்கு எவ்வித சாட்சியங்களும் இல்லாததால் அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரினார்.

எனினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் பிணைவழங்குதலிக்கு எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள பிற நபருக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பினை போலியான ஆவணங்களை தயாரித்து கைப்பற்றிய சம்பவம் தொடர்பில் ரிப்கான் பதியூதின் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபரை பிணையில் விடுவித்தால் விசாரணை நடவடிக்கைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்த கொழும்பு பிரதான நீதவான் அவரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்து உத்தரவிட்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதிவாளர் ஒருவரை பிணையில் விடுவிக்க நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

குறித்த காணியை போலி ஆவணங்களை தயாரித்து 5 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com