அடித்தனர் அந்தர் பல்டி. ஒரு மணிநேரத்தில் 3000 பேர் பொதுஜன பெரமுனவில் இணைவு!
கடந்த ஐந்து வருட காலமாக ராஜபக்சர்களுக்கு எதிரான அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டுவந்த இலங்கை முஸ்லிம் மக்கள் திடீர் மாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று ஒரு மணி நேரத்தில் சுமார் 3000 பொதுமக்கள் பொது ஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்டசியின் 51 கிராமசேவகர் பிரிவிற்கான இணைப்பாளர்கள், அங்கத்துவர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்றபோதே அவர்கள் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளரான வை.எம் முஸம்மிலின் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன பிரதான அமைப்பாளரும் வனவிலங்கு வன பாதுகாப்பு ராஜங்க அமைச்சருமான விமல் வீர திஸ்ஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவரை சம்மாந்துறை மக்கள் வெற்றிலை கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர்.
மேலும் இந் நிகழ்வில் வண்டிக்கார சங்கம், விவசாய அமைப்பு, இளைஞர் அமைப்பு, மகளிர் அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாறுக் ஷிஹான்
0 comments :
Post a Comment