ஐ.எஸ் ஆயுதங்கள் உள்ளதா? புத்தளக்காட்டுப்பகுதியில் 3 நாட்களாக தேடுதல்
புத்தளம் வண்ணாத்திவில்லு, லெக்டோவதை பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் பொலிஸார் மூன்றாவது நாளாகவும் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றும் குறித்த பகுதியில் தேடுதல் முயற்சி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. வண்ணாத்திவில்லு, லெக்டோவதை பகுதிகளில் சஹ்ரான் தலைமையில் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கான பயிற்சிகள் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் உட்பட இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் தற்போது அதே பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment