2025 வரை ஐதேகவின் தலைவர் ரணிலே...! வைத்த காலைப் பின் வாங்குகிறார் சஜித்!
2019 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் கட்சிச் சம்மேளனத்தில், எதிர்வரும் 06 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே செயலாற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை எனவும் தெரியவருகின்றது. ரணில் விக்கிரமசிங்க சிற்சில விடயங்களில் அர்த்தமற்ற முறையில் நடந்துகொண்டபோதும், அவருக்குச் சவலாக எந்தவொரு நபரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என்பதை நிகழ்கால செயற்பாடுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையை ஏற்பதற்காக கட்சி யாப்புக்கு ஏற்ப எந்தவிதத் தடைகளும் இல்லை என ஐதேக சட்டத்தரணிகள் சபை தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க பதவியை இராஜினாமாச் செய்யாதிருந்தால் 2025 வரை ரணில் விக்கிரமசிங்கவே தலைமையை ஏற்க வேண்டிவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comments :
ரணிலின் மாமாவை (ஜேஆர்) "Twentieth Century Fox" என்று கூறுவார்கள். ரணிலை "Twenty-first Century Fox" என்று கூறலாம். தமிழில் பனங்காட்டு நரி என்று கூறலாம். சஜித் ஆளுமையற்றவர். ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுடன், கட்சியின் உபதலைவர் பதவியைவிட்டே ஓடினவர். இவரைத் தலைவராக்கினால், வரும் பொதுத் தேர்தலில் தோற்றுவிட்டால் தலைவர் பதவியையே வீசிவிட்டு ஓடிவிடுவார். தோல்லியைக் கண்டு துவண்டு விடுபவர்கள் தலைவர் பதவிக்கு தகைமை இல்லாதவர்கள். அவரை நம்பிக்ெகாண்டிருக்கும் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் அனுதாபங்கள்.
Post a Comment