Thursday, January 9, 2020

2020 இல் பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - பந்துல குணவர்தன

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின் போது மாணவர்களுக்கு எந்தவொரு காரணத்திற்காகவும் அசாதாரணம் நேர இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அவர் வலியுறுத்தினார். பகிடிவதை காரணமாக கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 200 மாணவர்கள் பலக்லைக்கழகத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாணவர்களுக்கும் தமது கல்வி நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சூழல் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாக்கப்படும்.

வகுப்புத் தடைக்கு உள்ளாகியுள்ள மாணவர்களினதும், பகிடிவதை சட்டத்தின் கீழ் மாணவர் அந்தஸ்த்தை இழந்துள்ள மாணவர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com