LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு மஹிந்தவுக்கு ஐ.நா மீண்டும் அழுத்தம்!
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் வழங்கியுள்ளது.
ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளரான ஹனா சிங்கர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று மாலை அலரிமாளிகைக்கு சென்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்து அடுத்த வருடத்தில் இலங்கை 65ஆவது ஆண்டை கொண்டாடவுள்ளது.
அதேசமயம் ஐ.நா சபை தனது 70ஆவது நிறைவாண்டை அடுத்தவருடம் கொண்டாடவுள்ளது. இதனிடையே இலங்கை – ஐ.நா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யவும், பரிந்துரைகளை முன்வைக்க அறிக்கை தயாரிக்க அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்தும் இந்த சந்திப்பில் ஐ.நா நினைவூட்டியது.
குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளவற்றை செய்வதுபோல், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அமுல்படுத்த தவறவேண்டாம் என்பதை ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளர் பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment