Monday, December 16, 2019

முதலைக்கு தீனிபோட்ட வெள்ளைவான் சாரதிகளுக்கு விளக்கமறியல்..

வெள்ளைவேன் சாரதி என அடையாளப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று மாலை முன்நிறுத்தப்பட்டபோது எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இருசந்தேக நபர்களும் வெள்ளைவான் கடத்தல்களுக்கு கோட்டாபய ராஜபக்சவே உத்தரவு வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்நிலையில் கொழும்பின் புறநகரான மஹர பிரதேசத்தில் கடந்தவாரம் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com