மண்சரிவில் சிக்குண்டு நாளை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவன் குடும்பத்துடன் பலி
நாளைய தினம் இடம்பெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்விருந்த மாணவன் ஒருவன் மண் சரிவில் சிக்குண்டு குடும்பத்துடன் பலியான சோகம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை நாகந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றது. இதன் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட வலப்பனை பதியபெலல்ல பிரதான வீதிக்கு அருகில் நாரந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் பிரதான வீதியுடனான பாரிய மண்மேடு சரிவு (30) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நாரந்தலாவை பகுதியில் பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்திருந்த இரண்டு வீடுகள் மீது மண் மற்றும் பாரிய கற்கள் இதன்போது சரிந்து மூடியுள்ளன.
இதன்போது, ஒரே வீட்டில் வசித்து வந்த 50, 48,17,மற்றும் 18 வயதுடைய தந்தை, தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் மண்ணில் புதையுண்ட நிலையில் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளனர்.
சடலமான மீட்கப்பட்ட மாணவன் நாளைய தினம் கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுத தயாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment