Saturday, December 14, 2019

மணல் கொள்ளையை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு சிறிதரன் எழுதிய கடிதம் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு கடிதம் எழுதியது என்பது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என கிளிநொச்சி மாவட்ட மக்களில் பலர் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் கிளிநொச்சியில் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றவர்களில் பலர் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் பிரதேச மற்றும் கிராம மட்ட அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் எனவும் அவ்வாறானவர்களே தற்போதும் கிளிநொச்சியின் பல இடங்களில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களை தன்னோடு வைத்துக்கொண்டு சிறிதரன் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது என்பது சாத்தான் வேதம் ஒதுவது போன்றதே எனவும். தெரிவித்துள்ள பொது மக்கள் ஜனாதிபதியே சிறிதரனுக்கு கடிதம் எழுத வேண்டும் மணல் கொள்ளையில் ஈடுப்படும் தங்களுடைய கட்சிக்காரர்களை கட்டுப்படுத்தி கிளிநொச்சி காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பளை பிரதேச சபைக்கு தமிழரசுக் கட்சியியில் போட்டியிட்ட கிளாலியைச் சேர்ந்த மணல் மணியம் என்பவர். இவரே கிளாலியில் அதிகளவு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்ற ஓருவர். இதனைத் தவிர கண்டாவளை பெரியகுளம் பிரதேசத்தின் கட்சியின் அமைப்பாளர் தீபன் என்பவர் பாரியளவு மணல் கொள்ளையில் ஈடுபடுகின்ற ஒருவர். இப்பொழுது சிறிதரன் தன்னுடன் அவரை எல்லா நிகழ்வுகளுக்கும் அழைத்துச் செல்கின்றார். கட்சியின் அலுவலகத்தில் இன்று 14-12-2019 இடம்பெற்ற அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்வில் தீபன் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தார்
.
அத்தோடு திருவையாறு பிரதேச கட்சியின் அமைப்பாளர் ஜனா என்பவர் மீள்குடியேற்றக் காலம் தொடக்கம் இன்றுவரை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டுவரும் நபர். இதனைத் தவிர கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவன் இப்படி மணல் கொள்ளையில் ஈடுப்படுகின்றவர்களை தனனோடு வைத்துக்கொண்டு சிறிதரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையானது எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற சிறிதரன் தன்னோடு இருக்கின்றவர்களை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படாது தடுத்து நிறுத்தினாலேயே கிளிநொச்சியில் பெருமளவு மணல் கொள்ளையை தடுக்க முடியும் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com