Monday, December 16, 2019

'இலங்கை பெளத்த நாடே அல்ல...அறிக்கை விட்ட விக்னேஷ்வரனுக்கு பேரிடி!

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரனை மிக அவசரமாகக் கைது செய்யுமாறு கோரி, பொலிஸ் தலைமையகத்திற்கும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவிற்கும் நேற்று இரண்டு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிங்களே தேசிய அமைப்பினாலேயே இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வரலாற்றாய்வாளர்களாலும் தொல்பொருளாய்வாளர்களினாலுமே இலங்கை ஒரு பெளத்த நாடு என்று கதைவிடப்பட்டுள்ளது. அது மகாவம்சம் என்ற சோடிக்கப்பட்ட பிரபந்தத்தை அடிப்படையாகவே உள்ளது. உண்மையான தகவல்களின் அடிப்படையில் அல்ல என முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன் நேற்றுக் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ்வரன் அவர்கள் தனது அறிக்கையில்,

இந்த நாட்டின் எந்தவொரு தனிநபரோ அல்லது அரசியல்வாதியோ ஸ்ரீலங்காவை பெளத்த நாடு என்று குறிப்பிடுவதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. பெளத்த பிக்குகளினால் பாளி மொழியில் வரலாறு பற்றிச் சொல்கின்ற பல பிரபந்தங்கள் எழுதப்பட்டுள்ளன. அவர்களின் பிழையான கருத்துக்களால் எண்ணப்பாடுகளால் மக்கள் வாழ்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் ஆரம்ப காலங்கள் எந்தவொரு சிங்களவரும் வாழவில்லை எனவும், அது தமிழர்களின் தாயகம் எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், விக்னேஷ்வரின் கருத்துக்கள் இனவாதத்தைத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டுவதால், அவரை மிக அவசரமாக தண்டனைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும் எனக்கோரி சிங்களே தேசிய அமைப்பு பொாலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

விக்னேஷ்வரின் கருத்துக்கு பெரும்பாலான சிங்கள அமைப்புக்களுக்கும், வரலாற்றாய்வாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com