சுவிஸ் தூதரக ஊழியரை கைது செய்ய உத்தரவு. அவர் அல்ல பாதிக்கப்பட்டது, நானே பாதிக்கப்பட்டுள்ளேன் கோத்தா.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் தூதரக ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு நாட்டில் பல குளப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறானதோர் சம்பவம் நடைபெறவில்லை என குற்றச்சாட்டை தொழில்நுட்பரீதியான ஆதாரங்களுடன இலங்கை அரசு மறுத்து வருகின்றது.
குறித்த பெண் நாட்டின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் அவரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்று பிற்பகலில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை வெளியிட்டு அரசாங்கத்திற்கு பங்கத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்படி அவர் கைது செய்யப்படவுள்ளார்.
இதேநேரம் இன்று ஊடகங்களின் பிரதானிகள் சந்தித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, இவ்விடயத்தில் குறித்த பெண் அல்ல தானே பாதிக்கப்பட்டவன் என தெரிவித்துள்ளார். அங்கு கருத்துரைத்த அவர், சுவிட்சர்லாந்து அரசானது தனது ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தவுடன் முறைப்பாடு செய்ததில் எந்த தவறும் கிடையாது. ஆனால் தவறான தகவலை வழங்கியமையே தவறாகும் என்று கூறியுள்ளார்.
ஹானியா பரிஸ்ரர் பிராண்சிஸ் என்ற குறித்த பெண்ணிடம் இன்று 5 வது நாளாக சீஐடி யினர் வாய்முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். அத்துடன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவரை அங்கோடை உளவியல் நிலையத்திற்கு அனுப்பி அவர் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பிலும் அறிக்கை பெறவுள்ளனர். மேலும் குற்றச்சாட்டப்பட்டவாறு அவர் பாலியில் துன்புறுத்தலுக்கு உள்ளானாரா என்பது தொடர்பிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துறைசார் நிபுணர் ஒருவரிடம்; பரிசோனைக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி தகவல்களின் பிரகாரம் குறித்த பெண் பொய்யான தகவலை வழங்கியுள்ளார் என்பது நிரூபணமாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.
ஹானியா பரிஸ்ரர் பிராண்ஸிஸ் என்ற குறித் ஊழியர் சிங்கள பௌத்த குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இவர் பின்னாளில் மதம் மாறிக்கொண்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர் ஒருவரின் மருமகள் என்றும் தெரியவருவருடன் அவரது இயற்பெயர் சிறியலதா பெரேரா என்தாகும்.
0 comments :
Post a Comment