Tuesday, December 3, 2019

கோட்டாபாயவுடன் உறவை வலுப்படுத்துவதில் இந்தியா, சீனா உள்ளிட்ட மேற்குலநாடுகள் தீவிரம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபாயவுடன் உறவை வலுப்படுத்துவதில் இந்தியா,சீனா அமெரிக்க உள்ளிட்ட மேற்குலநாடுகள் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி கடும்போக்கு கொண்டவர் எனவும் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் தனது சகோதரன் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் நெருக்கமான உறவை பேணியது போன்று கோட்டாபாயுவும் சீன சார்பு கொள்கையினை எடுப்பார் எனவும் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்து நிலையில் தற்போது புதிய ஜனாபதி அவ்வாறான நிலைப்பாட்டிலிருந்து விடுப்பட்டவராக இருப்பதாகவும் அவர் அனைத்து நாடுகளுடன் சுமூகமான உறவை பேண விருப்பம் கொண்டவராக காணப்படுவதாகவும் குறிப்பிடும் அரசியல் அவதானிகள், நடைமுறைக்கு சாத்தியமான யாதார்த்த அரசியல்வாதியாக கோட்டாபாய காணப்படுகிறார் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாக இந்தியா, பாகிஸ்தான், நியூலாந்து,ஐக்கிய அரபு இராச்சியம், ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து தங்களது இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அமெரிக்கா, பிரித்தானிய,கனடா, போன்ற பல மேற்குலநாடுகளின் பிரதிநிதிகள் தொலைபேசி ஊடாகவும் தங்களின் நல்லெண்ண தகவல்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இலங்கையின் புதிய அரசுடன் அண்டைய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தங்களின் உறவுகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com