சீமான் : புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் பகட்டு பிரதியீடும் தவறான இலக்கு நிர்ணயமுமாகும். சிவகுருபரன்..
நம்பிக்கைக்குரிய விருப்பமானவர்களை இழக்கும்போது அந்த பிரிவுதுயரை மனம் சமாளிக்க வேறோருவரில் இழந்தவரை பிரதியிட்டுக்கொள்ளுதல் மனதின் coping mechanism ஆகும்.
ஈழத்தவரின் சீமானுக்கு ஆதரவு என்பது அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்த விருப்பதுக்குரிய சூழலின் அழிவை, அவர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்து செயற்பட்ட தலைமையின் மறைவின் பின் ஏற்பட்ட griefing பிரிவுத்துயரை/மனச்சோகத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து தாங்கள் விரும்பிய நீண்டகாலமாக வாழ்ந்த சூழலை ** மனதளவில் தொடர்வதற்கும் மனத்தின் வெறுமை anxiety போன்றவற்றை தணித்து மன அழுத்தங்களை சமநிலைப்படுத்தும் ஒரு பகட்டான பிரதியீடு ஆகும்.
இந்நிலை தொடந்து இறுதியில் உண்மை நிலை உணர்ப்படும்போது அது emotional shock போன்ற நிலையையும் அதீதமாக நம்பியோர் மனப்பிறழ்வுக்கும் சிலர் மனவடு என்பனவற்றுக்கும் உள்ளாவர் அத்தோடு இழக்கப்பட்டவருக்காக உணர்வு
ரீதியாக பிரதியிடப்படும் நபர் (சீமான்) தீயவராக இருப்பின் பாதிக்கப்பட்டவர்கள் சுரண்டல்களுக்குட்படுவார்கள் (பணம் ஈட்டல்கள் ஏலவே நடைபெறுகிறது).
உண்மை நிலை உணரப்படாது போனால் தற்காலத்தில் வாழ்வோர் தங்கள் உண்மை மீள் இலக்கு நோக்க அவசியத்தை reframing புரிந்துகொள்ளாமல் தங்கள் productivityயான வாழ்வையும் அழித்து, தம் பின்னே வரும் இளையவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பிழையான இலக்கு நிர்ணயத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
(10வருடமாகியும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் தொழிநுட்பரீதியாக உரிய நியமங்களுடன் மீள்கட்டமைக்கப்படவில்லை, புலம்பெயர் நாடுகளிலும் வலுவான ஒற்றுமையுள்ள அமைப்புக்களும் இன்னும் இல்லை என்பதை கவனத்திற் கொள்க)
முன்னைய காலங்களில் தமிழர் இறப்பு வீடுகளில் ஒப்பாரி, இறந்தவருக்கான 8ம் நாள் கிரியைகள், 31ம் நாள் கிரியைகள் என்பன நெருங்கிய உறவுகளிடையே இறந்தவரின் இழப்பை உளவியல்ரீதியாக உறுதிப்படுத்தின அத்தோடு மனவடு போன்றவற்றையும் இல்லாமற் செய்தன ஆண்டுத் திவசங்கள் மனஅழுத்தத்தை போக்கின.
31ம் நாள் வரை உறவினர்கள் பலர் சாவு வீடுகளில் தங்கி நிற்ப்பது இறந்தவரின் பிரிவுதுயரால் தவிக்கும் மிக நெருங்கியவர்களுக்கு மன ஆற்றுப்படுத்தலை வழங்கி அவர்களின் பிந்தைய நாட்கள் இதன்மூலம் செம்மைப்படுத்தப்பட்டது, இயல்பான வாழ்க்கைக்கு இட்டுச்சென்றன.
உளவியல் ஆய்வுகளின்படி புதிய முயற்சிகளை செய்தால் ஒரு மனநிலை மாற்றம் 21 நாட்களுக்குள் ஆரம்பித்துவிடும் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம், ஆனால் அண்மைய ஆய்வுகள் 13 நாட்களில் ஆரம்பிப்பதாக தெரிவிக்கிறது.
பள்ளிக்கால காதல் பருவங்களில் இரு வேறுபட்ட பாடசாலையை சேர்ந்த மாணவி பின்னால் மாணவன் சென்ற (அநேகமாக) ஒருமாதத்துள் நல்ல உரையாடல் நிலைக்கு மாறுவதும் இந்த 21நாள் காரணமே.
சைவசமயத்தில் பூஜை சமய அனுட்டானங்கள் மந்திர உச்சாடனங்கள் ஆக்ககுறைந்த 21நாள் வரை என்பதையும் கவனத்திற்கொள்க.
**அத்தோடு எவ்வளவு காலம் வெளிநாட்டில் தங்கினாலும்/வெளியூரில் வாழ்ந்தாலும் விடுமுறைக்கு சொந்த நாடு/சொந்த ஊர் செல்லும் அடிப்படைக்காரணமும் அங்கு சென்றதும் அமைதி, மகிழ்ச்சி அதிகரித்து இருப்பது போன்ற உணர்வும் வரக்காரணம் எமக்கு அந்த இடம் பால்யக்காலங்களில் இனிமையை தந்து எம் நினைவுகளில் நல்ல நினைவுகளை பதிந்தமையும் ஆகும்.
ஈழத்தவர் விடயத்தில் வாழ்வின் பெரும்பகுதியை போராட்டசூழலில் எம் உரிமைக்காக செலவழித்து தற்போது தங்கள் சொந்த சமூகங்களிலிருந்து விலகி வெளிநாடுகளில் அதிக நேரத்தை வேறு மக்களோடு செலவழித்து வாழ்கிறார்கள், ஈழத்தவரின் விருப்பத்துக்குரிய பெரும்பகுதிக்காலம் வாழ்ந்த சூழலை மனதளவில் சீமானின் காணொளிகள் பேச்சுக்கள் மற்றும் அவரது மேடை, ஊடக நடவடிக்கைகள் ஈழத்தவரின் மன ஏக்கத்தை ஓரளவு திருப்பதிப்படுத்துவதால் சீமான் மிக இலகுவாக இழந்தவிடயங்களையும், நபர்களையும் உணர்வுகளால் பிரதியிடப்படுகிறார்.
இந்தப்பதிவு எங்கள் மக்களின் சிறுபகுதியினரின் தவறான இலக்கு நம்பிக்கையை (wrong goal setting) அலசும்விதமாகவும் திசைமாறிப்பாயும் பலமான எம் சமூகவலு சரியான பாதைக்கு மாற்றப்பட வேண்டும் என்பதற்காக உளவியல் அடிப்படைகளை வைத்து என்னால் எழுதப்பட்டது. எவரது உணர்வுகளை புண்படுத்தவோ அல்லது ஏளனம் செய்யும் நோக்கமோ அல்ல.
0 comments :
Post a Comment