13 ஐ முழுமையாக அமுல்படுத்த முடியாது இந்தியாவில் வைத்தே அறிவித்தார் ஜனாதிபதி
அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த முடியாது என 13 பிரசவித்த மண்ணில் வைத்தே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி தனது விஜயத்தின் போது இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு மாறாக 13 வது அரசியலமைப்பில் உள்ள சில விடயங்களை அமுல்படுத்த முடியாது.அதற்கு மாறாக மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதியை அபிவிருத்தி செய்யவோ அல்லது வேலைவாய்ப்புகளை வழங்கவோ சிங்கள மக்கங் மறுப்புத் தெரிவிக்கமாட்டார்கள் எனவும்,குறிப்பிட்ட அவர் அரசிலமைப்பின் 19 வது திருத்தம் தோல்வியை ஏற்படுத்தியிருக்கிறது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அதனை நீக்கிவிடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசிலமப்பின் 13 மூலம் மாகாணங்களுக்கு காணி பொலீஸ் அதிகாரங்கள் வழங்க்கப்பட்டிருந்தன. 13 வது அரசிலமைப்ப திருத்தத்தை கொண்டு வருவதற்கு இந்தியாவே முழுமையான காரணகர்த்தாவாக இருந்தது. ஆனால் 1987 முதல் 13 வது அரசிலமைப்பு மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை மத்திய அரசு மாகாணங்களுக்கு வழங்காது இன்று வரை இருந்து வரும் நிலையில் இந்தியாவில் வைத்தே ஜனாபதியின் இவ்வறிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
0 comments :
Post a Comment