Saturday, December 14, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் பா.உ 12 பேருக்கு ஆளுங்கட்சிப் பகுதியில் ஆசன ஒதுக்கீடு!

ஜனவரி 3 முதல் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சியின் இடத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தை விட எதிர்க்கட்சியில் அதிக உறுப்பினர்கள் இருப்பதால் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் அமர வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்த சபையில் அரசாங்கத்திற்கு 116 ஆசனங்களும், எதிர்க்கட்சிக்கு 116 ஆசனங்களும் உள்ளன. இருப்பினும், புதிய அரசாங்கத்தில் 96 உறுப்பினர்கள் உள்ளனர். சபாநாயகர் தவிர 128 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கேற்ப, 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்க்கட்சியின் பக்கத்தில் அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள். வெற்றிடமாக உள்ள 12 இடங்களை அரசாங்கம் தரப்பில் ஒதுக்க வேண்டியிருந்தது என்று பாராளுமன்ற சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கூறினார்.

ஆளுங்கட்சியின் கடைசி வரிசையில் அமர்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பன்னிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களே எனவும் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com