Sunday, December 1, 2019

வடக்கில் 100-150 மி.மீற்றர் பலத்த மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் அதிகளவாக 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என வழிமண்டலவியல் திணை்கள்ம அறிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை உள்ளிட்ட பல்வேறு அனர்த்த நிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 643 குடும்பங்களைச் சேர்ந்த 2,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மண்முனை வடக்கில் 342 குடும்பங்களைச் சேர்ந்த 1,116 பேரும், காத்தான்குடியில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள், நாவற்குடா கிழக்கு பாலர் பாடசாலையிலும், காத்தான்குடி பதுரியா மற்றும் காத்தான்குடி பல்தேவை கட்டடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பலர் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அம்பாறையில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில், குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், குருநாகல், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com