கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்று 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் அதன் தோல் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறே நாயின் தோலும் காணப்பட்டுள்ளது. இந்த நாயின் தோல் பிரிதொரு நாய் அல்லது காகத்தினால் தங்களது கடைக்கு முன்பாக காவிவந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்
நாயின் கால் ஒன்றின் அரைவாசி பகுதியுடன் இறைச்சி எடுக்கப்பட்ட தோல் காணப்பட்ட நிலையில் குறித்த விடயம் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து அவற்றை பார்வையிட்டுள்ளனர். குறித்த தோளுக்குரிய நாய் வெட்டப்பட்டு இறைச்சி அகற்றப்பட்ட நிலையில் தோல் காணப்படுகிறது என்பதனை உறுதிசெய்துள்ளனர்.
மூன்று மாதங்களான நாய்க்குட்டி ஒன்றே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விபத்தினால் இறந்த நாய்க்குட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இது சீராக வெட்டப்பட்டு இறைச்சி அகற்றப்பட்ட நாயின் தோலாக காணப்படுகிறது. எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment