Monday, November 25, 2019

மனோகணேசனிடம் வடக்கத்தையானுக்கு வராத கோபம் தோட்டக்காட்டானுக்கு வந்திருக்கிறது.

வடக்கத்தையான் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேசிய போது வராத கோபம் தோட்டக்காட்டான் என்று பேசிய போது மனோகணேசனுக்கு வந்துள்ளது. ஆச்சரியப்படுவதற்கில்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் மலையக மக்களை இழிவுப்படுத்தும் சொற்பிரயோகமான வடக்கத்தையான் என ஒரு தொலைபேசி உரையாடல் மூலம் பேசியிருந்தார். அப்போது அதற்கு பலரும் தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தார்கள். இதேவேளை அக்காலக்கட்டத்தில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோகணேசன் அவர்களிடம் ஊடகவியலாளர் ஒருவர் வடக்கத்தையான் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அன்று அமைச்சர் மனோகணேசன் சிறிதரன் அவர்கள் அப்படி பேசியிருக்கவில்லை என்று சொல்கின்றார் எனவே அதனை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார். இதுவும் கிளிநொச்சியில் மனோகணேசன் அவர்கள் தொடர்பில் சமூகத்தில் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் அன்று தான் அமைச்சராக இருந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடக்கத்தையான் என்று பேசியதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் பேசவில்லை. காரணம் அவர் அமைச்சராக இருக்கும் அரசின் பங்காளி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால்.

அன்று வடக்கத்தையானுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தால் இன்று தோட்டக்காட்டான் என்பது வந்திருக்காது.முளையிலேயே கிள்ளுவதற்கு அதிகாரத்துடன் இருந்த அமைச்சர் தவறிவிட்டார். காரணம் அவரது நலன் என்பதே எனது கருத்து. இது ஒருபுறமிருக்க

அதாவுல்லாவின் கருத்து வன்மையாக கண்டிக்கதக்கது. ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு இனத்தை கொச்சைப்படுத்தும் வார்த்தையை அவர் பயன்படுத்தும் துணிவு எங்கிருந்து கிடைத்தது? அவர் அப்படி பேசும் போது நீங்கள் கோப்பட்டு தண்ணீரை ஊற்றியதற்கு பதிலாக எழும்பிய வேகத்தில் பளார் என கண்ணத்தில் அறைந்திருக்க வேண்டும். அதாவுல்லா போன்றவர்களுடன் அப்படிதான் நடக்க வேண்டும். இதனைத் தவிர அறிக்கைகள், கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்களையும் கடந்து சட்டரீதியான நடவடிக்கைக்கும் செல்லவேண்டும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் சட்டநடவடிக்கையானது சமூகத்தை கொச்சப்படுத்தும் எந்த வாரத்தைப் பிரயோகங்களையும் எவரும் எதிர்காலத்தில் பேசக்கூடாது தடுக்கும் வகையில் இருக்க வேண்டும்

No comments:

Post a Comment