Sunday, November 24, 2019

மாவீர்களின் வரலாற்றை அழித்துக்கொண்டு துயிலுமில்லத்தில் வாக்குகளாக நடிக்கும் சிறிதரன் கூட்டம்

கிளிநொச்சியில் எஞ்சியிருக்கும் மாவீரர்களின் வரலாறுகளை சொல்லுகின்ற பதிவுகளை ஒரு புறம் அழித்துக்கொண்டு, மறுபுறம் மாவீரர் துயிலுமில்லங்களில் வாக்குளுக்காக சிறிதரனும் அவர்களது கூட்டத்தினரும் நடிகின்றனர் என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஏராளமான முன்னாள் போராளிகளும், அவர்களது குடும்பங்களும், மாவீரர் குடும்பங்களும்
நாளுக்கு நாள் வறுமையின் பிடிக்குள் சிக்கி மூன்று வேளை உண்பதற்கு போராடிக்கொண்டிகொண்டிருக்கின்றார்கள், பல முன்னாள் பேராளிகள் தொழிலின்றி மிகவும் நலிவுற்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாத இக் கூட்டம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் வந்தவுடன் மாவீரர்களை நினைவு கூர்வதாக காட்டிக்கொண்டு வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் சமூகங்களிடம் பெருமளவு பணத்தை பெற்று மாவீரர் நாள் நடத்துவதாக கூறி பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.


2015 க்கு பின்னர் பெருமளவு நிதி பெறப்பட்டு நடத்தப்பட்ட மாவீரர் நாள் கணக்கறிக்கைகள் இதுவரை பொதுவெளியில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது கிளிநொச்சியில் மாவீரர் பணிக்குழுவின் தலைவர் முன்னாள் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் பசுபதிபிளை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், அதன் முன்னாள் உப தவிசாளர் நகுலன் ஆகியோர் கிளிநொச்சி வர்த்தகர்களிடம் பணம் சேகரித்து வருகின்றனர்.


இதனை தவிர கிளிநொச்சி திருநகர் பகுதியில் 1991 ஆம் ஆண்டு கொக்காவில் சண்டையில் மரணித்து மாவீரன் கமலின் பெயரில் இருந்து வீதியின் பெயரை மாற்றி உயிரோடிருக்கின்ற பசுபதியின் பெயரை வைத்துள்ளனர். இது அப்பிரதேச பொது மக்கள் மத்தியில் கடும் கண்டத்திற்குள்ளாகியுள்ளது.

மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வரலாற்றை அழித்துக்கொண்டு மறுபுறம் மாவீரர் நாள் நினைவுகளை நடாத்தும் அவர்களின் செயற்பாடுகள் போலியானது எனவும் அரசியலின் இருப்புக்காக மக்களின் வாக்குகளை அபகரிக்க நடிக்கின்றனர் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் இந்த பெயர் மாற்றத்தை மேற்கொண்டார் எனவும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அவருடைய கூட்டமும் வாக்குகளுக்காக இவ்வாறு நடிகின்றனர் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com