Tuesday, November 12, 2019

பெரும்பாண்மை சிறுபாண்மை என்ற மரபை உடைத்தெறிந்து சகோதரஇனங்கள் என ஆட்சி புரிவோம். கூறுகின்றார் பசில்.

இந்நாட்டில் காணப்படும் பெரும்பாண்மை சிறுபாண்மை என்ற மரபினை உடைத்தெறிந்து சகோதர இனங்கள் என்ற கொள்கையுடன் எதிர்காலத்தில் ஆட்சியை கொண்டு செல்வோம் எனத் தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ச.

மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா மக்கள் இளைஞர் முன்னணி தலைவர் ரீ.ஹரிபிரதாபின் ஏற்பாட்டில் கல்முனையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை(12) காலை அ.நிமலன் மற்றும் ஜெ.சி.கிஷாந்தன் ஆர்.சி றஜீவகுமார் தலைமையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் :

கிழக்கு மாகாணத்தில் 54 ஆயிரம் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள் . தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 ம் ஆண்டு எங்களை தோற்கடித்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் தங்களது பைகளை நிரப்பி கொண்டதை மாத்திரம் செய்தனர். இந்த நல்லாட்சி ஆட்சியிலே பௌத்த விகாரையில் கோவில் பள்ளிவாசலுக்கு போவற்கு மக்களுக்கு பயமாக இருக்கிறது. மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல அச்சப்படுகின்றார்கள் . இந்த அச்ச நிலைமையை இல்லாது செய்ய கோட்டாபாய ராஜபக்ச காத்துக் கொண்டு இருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 17ம் திகதி முதல் 1ம் திகதிக்குள் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம் இந்த அரசாங்க படித்த இளைஞர்களுக்கு தொழில் வழங்காது புறக்கணிப்பை செய்து வருகின்றது.

இந்த ஆட்சியில் விவசாயத்தில் மக்கள் நெருக்கடியை சந்தித்து தாய்மார்கள் இ பெண்களின் நகைகள் அடகு வைக்கப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருகின்றனர் கோட்டாபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து அவற்றை மீட்டு எடுக்க கூடிய விதத்தில் விவசாயத்திற்கு பல்வேறு சலுகைகளை வழங்கி நகைகளை மீட்டெடுக்கும் பொற்காலமாக அமையும்.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து மூன்றே நாட்களில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தி இந்த பிரதேச மக்களின் அவலத்தை துடைத்தெறிவார் . இந்த நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை, என்ற மரபு உடைத்தெறிந்து சகோதர இனம் என்றே பொதுஜன பெரமுன ஆட்சியில் இருக்கும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிரியானி விஜய விக்கிரம பைசர் முஸ்தபா உள்ளிட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

பாறுக் ஷிஹான்









No comments:

Post a Comment