Monday, November 11, 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனின் பின்பக்கம் கழுவ உருவாக்கப்பட்ட கட்டமைப்பு..

"அடியாள் " என்பதற்கு மன்னர் ஆட்சிக் காலத்தில் பொருள் வேறு.

மன்னர் கழிப்பறை செல்லும் போது குறிப்புணர்ந்து ஒருவர் காத்திருக்க மன்னர் தன் கடன் முடித்து குறிப்புணர்த்த அந்த அடியாள் மன்னரின் பிருஷ்ட பாகங்களைக் கழுவித் துடைத்து அவருக்கான குறிப்பான சிஸ்ருஸைகளை செய்பவர் "அடியாள்' எனப்படுவர்.

பிரபாகரன் காலத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனுக்கு இந்த "அடியாள் " வேலையை ப் பய பக்தியோடு செய்தது.

மன்னரின் மரணத்தோடு அடிமை முழு விடுதலையும் மன ஆறுதலும் அடைவதைப் போல 2009 இன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுக்கள் நடவடிக்கைகளை நீங்கள் இப் பின்னணியில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

அடிமைகளின் தேவைகள் மிகவும் சிறியவை.எல்லைக்கு உட்பட்டவை .

இன்றுவரை தமிழ் அரசியல் பிரதிநிதி களுடைய தேவைகள் பெரும் கனவுகள் அல்ல. பரந்த விசாலமானவை அல்ல.

ஐந்து வீட்டுக் கோரிக்கையில் இருந்த விசுவாசம் உள சுத்தி தமிழர் ஆட்சி,சுயாட்சி ,சமஸ்டி இப்படியான கோரிக்கைகளில் அதே அடியாள் மனநிலையில் இருக்கும் கூட்டமைப்பிடம் இல்லை.

போராட்டப் பின்னணியில் கடந்துபோன காலத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பொன்னான தருணங்கள் அரசியல் தீர்வை அடியொற்றி" என்னை ஏற்றுக்கொள் ! " என கெஞ்சி இறைஞ்சி நின்றன.

"முதலையும் மூடனும் கொண்டது விடா !'

என்ற மூதுரைக்கு ஏற்ப பொன்னான தருணங்களை கைவிட்டு சர்வதேசத்துக்கு சாகசம் காட்ட முயன்ற பிரபாகரன் தட்டிக் கழித்தவை இரண்டு.

1) இலங்கை இந்திய ஒப்பந்தம்
2)ஒஸ்லோ ஒப்பந்தம்.
இரண்டும் மிகப் பெரியவை.

பத்துநாள் சாப்பாடு இல்லாமல் கொலைப் பட்டினியோடு இருந்தவனுக்கு முன்னால் அவனிடம் கருணையோடு கையளிக்கப்பட்ட பெருவிருந்து. இந்தாப்பா ! சாப்பிடப்பா ! என பரிமாறும் தருணத்தில் தட்டி எறிந்து சிலுப்பு காட்டும் ஒருவனை இரண்டு வகையில் நோக்கலாம். ஒன்று.அவன் சாப்பிட விரும்பவில்லை. மற்றது அவன் மூடன். பின்னர் கை தவறிப் போன காலத்தின் சலனங்களை இந்தப் பத்தாண்டு காலத்தில் பார்த்து வருகிறோம்.

மக்களின் அபிலாசைகள் இப்போது முற்றிலும் வேறானவை.

"அரசியல் தீர்வு கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால் இன்னும் நல்லது.'"

சுகனின் முகப்புத்தகப்பதிவு..

No comments:

Post a Comment