இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தோற்கடித்தாலே இந்நாட்டினை பாதுகாக்கலாம்..
அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தோற்கடிப்பதன் மூலமே எமது நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அடிப்படைவாதிகளால் எமது நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட அடிப்படைவாதம் காரணமாக தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சிங்கள சமூகத்தில் ஏற்பட்ட அடிப்படைவாதம் காரணமாக, திகனவில், தர்காவில் மற்றும் அக்குரனையில் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டனர்.
இன்று எமது பாதுகாப்பின் அச்சுறுத்தல் அடைப்படைவாதிகள்.
அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தோற்கடிப்பதன் மூலமே எமது நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும்.
நாம் உங்களுக்கு உறுதியளிக்கின்றோம். இந்நாட்டின் அடிப்படைவாதம், இனவாதத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே தோற்கடிக்க முடியும் என்று.
சம்பந்தனின் தோளில் கை போட்டுக் கொண்டு சஜித் வடக்கிற்கு செல்கிறார். இல்லையென்றால் வடக்கிற்கு செல்ல முடியாது. ஹக்கீம் அல்லது அமீர் அலியின் தோளில் ஏறிதான் அவர்கள் கிழக்கிற்கு செல்ல முடியும்.
எனினும் எந்தவித அடிப்படைவாதத்தின் தோளிலும் ஏறாமல் பொதுமக்களிடம் எமக்கு செல்ல முடியும்.
எங்களுக்கு காத்தான்குடிக்கு செல்ல முடியாது என்று கூறினார்கள்.
எனினும், எந்த அடிப்படைவாதிகளின் உதவியும் இல்லாமல் நாங்கள் இரண்டு கூட்டங்களை காத்தான்குடியில் வெற்றிகரமாக நடத்தி காட்டினோம்.
அனைவரையும் ஒரே கொடியின் கீழ் கொண்டுவர முடிந்தால், இந்நாட்டின் அடிப்படைவாதம் அந்த இடத்தில் தோற்கடிக்கப்படும் என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment