ஆரம்பித்தது சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான வாக்குப்போர்.
சுமந்திரன் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் அதிகாரத்துடன் இருநதால் தமிழரசு கட்சி என்ற ஒன்றே இல்லாது போய்விடும் என சிறிதரன் கட்சி ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதோடு சுமந்திரனுக்கு எதிராக கிளிநொச்சி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் கோரியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக் கட்சியின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் நடவடிக்கைகள் தொடர்பில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை உறுப்பினர்களுடையே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மைய நாட்களாக கிளிநொச்சியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். கிளிநொச்சிக்கு வருகை தரும் அவர் கிளிநொச்சியில் இளைஞர்களை சந்தித்து தனது ஆதரவு தளத்தை விரிவுப்படுத்தி வருகின்றார். அத்தோடு கௌதாரிமுனை மணல் பிரச்சினைக்காக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாடியிருந்தார். அத்தோடு தனது ஆதரவாளர்களை அதிகரிக்கும் படியும், எதிர்காலத்தில் தனித்துவமாக செயற்பட வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றால் குறைக்கப்பட்டு ஆறு பாராளுமன்ற உறுப்பினராக காணப்படுகிறது. எனவே இனி வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியிக்கு மூன்று ஆசணங்களே கிடைக்க கூடிய வாய்ப்புள்ளது. எனவே அந்த மூன்றுக்குள தெரிவு செய்யப்படுகின்றவர்கள் தனியே கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்குகளையோ, அல்லது யாழ் மாவட்டத்தின் வாக்குகளையோ தனியே பெறுகின்ற ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது
எனவே யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் வாக்குளை பெறுகின்ற ஒருவரே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளன. ஆகவே சுமந்திரன் கிளிநொச்சியில் தனது ஆதரவு தளத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுப்படத் தொடங்கியுள்ளார். இதற்காக அவர் சிறிதரனின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்துள்ளவர்களை இலக்கு வைத்து செயற்படத் தொடங்கியிருக்கிறார். அதற்கான சுமந்திரன் அவர்கள் கரைச்சி பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் குமாரசிங்கம் என்பவரை பயன்படுத்திவருகின்றார். குமாரசிங்கம் கடந்த வருடம் வரை சிறிதரனோடு சேர்ந்தியங்கியவர் .
எனவே குமாரசிங்கத்தின் மூலம் கிளிநொச்சியில் கடந்தவாரம் சுமார் இருபது வரையான இளைஞர்களை கிளிநொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சுமந்திரன் சந்தித்திருந்தார்' தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளராக பளை பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன் உள்ள போது அரை தவிர்த்து இச் சந்திப்பு இடம்பெற்றது. இதனால் சிறிதரன் சுமந்திரன் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதோடு, சுமந்திரனுக்கு எதிராக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து சுமந்திரன் ஐக்கியே தேசிய கட்சியுடனும், ரணிலுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார்
எனவும் அவரின் தனிப்பட்ட நலனுக்காகவே தமிழரசு கட்சியினை ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி கட்சியாக மாற்றினார் எனவும் அவர் தொடர்ந்து கட்சியில் இருந்தால் எதிர்காலத்தில் பாரம்பாரிய மிக்க தமிழரசு கட்சி என்ற ஒன்று இருக்காது எனவும் எனவே சுமந்திரனை தமிழ் மக்கள் அரசியலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கட்சி தொண்டர்களிடம் கூறி ய சிறிதரன் இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதன் விளைவாக தற்போது சிறிதரனின் ஆதரவாளர்களால் அவர்களது சமூக ஊடகங்கள் மூலம் சுமந்திரனுக்க எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு கிளிநொச்சியில் சுமந்திரனை சந்தித்த குமாரசிங்கம் உட்பட இளைஞர்களை மீண்டும் தன்னுடைய ஆதரவுக்குள் கொண்டு வருவதற்கும் சிலரை நியமித்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் சிறிதரன். இந்த வகையில் சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பணிப்போர் ஆரம்பித்து நடைப்பெற்று வருகிறது.
0 comments :
Post a Comment