Thursday, November 28, 2019

தொப்புள் கொடியுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. சினிமாவுக்குள் நுழைந்த புலிப்பணம்தான் காரணம். ஸ்ரான்லி ராஜன்

ஈழ பிரச்சினை இங்கு 1983ல் தான் நுழைந்தது, அதுவரை தொப்புள் கொடியுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. பொதுவாக ஈழ தமிழருக்கும் தமிழ்நாட்டு தமிழருக்கும் பொருந்தாது அவர்கள் மேம்போக்கு மனநிலை படைத்தவர்கள், சாதிய பாகுபாடும் உண்டு. இங்கிருந்து மலையகத்துக்கு சென்ற தமிழக தமிழர்கள் அதாவது தாழ்த்தபட்ட தமிழர்கள் அவர்களுக்கு இன்றும் உவப்பானர்கள் அல்ல‌.

பிரபாகரனின் ஈழ வரைபடத்தில் மலையகம் கிடையாது, அந்த 1957 மலையக மக்களை திருப்பி அனுப்பியதில் தமிழக கோபம் ஈழதமிழர் மேல் இருந்தது, அண்ணா கடல் திடல் என பேசிகொண்டிருந்தது அப்பொழுதுதான்

இம்மாதிரி ஒரு நிலை இருந்தது ஆனால் ராமநாதபுரம் டூ ஈழம் அப்பொழுதே கடத்தலுக்கு பிரசித்தி. குட்டிமணி தங்கதுரை கடத்தல்கார கேங்க்ஸ்டர்கள், அவர்களின் சீட கோடி பிரபாகரன்

1975க்கு பின் ஆயுத போராட்டம் வந்தபொழுது இங்கிருந்து அதாவது சிவகாசிக்கு வந்து பிரபாகரன் வெடிபொருள் வாங்கி சென்ற காலமும் உண்டு, குட்டிமணி பிரபாகரன் கோஷ்டி இலங்கையில் வங்கி கொள்ளை அடிப்பதும் போலீஸ் தேடும்பொழுது தமிழகத்துக்கு தப்புவதுமாக காட்சிகள் நடந்தன‌

இதில் 1983 கலவரம் திருப்புமுனை அப்பொழுது அகதிகள் வந்தார்கள், இந்திரா நரசிம்மராவை அனுப்பி நேரடியாக கொழும்பில் தலையிட்டார்

அப்பொழுதுதான் இந்திரா திட்டபடி அமிர்தலிங்கம் தமிழகம் வந்தார், ஏற்கனவே திராவிட நாடு அடைந்து சமத்துவ சமதர்ம பூமி அமைந்து பிராமணரை ஒழித்து கட்டி தமிழை வாழவைத்துகொண்டிருந்த அதாவது ஒரு மண்ணாங்கட்டி அரசியலும் இல்லாமல் இருவருமே ஊழலில் திழைத்துகொண்டிருந்த, கருணாநிதியும் ராம்சந்தரும் ஊழல் பேர்வழி என இந்திராவுக்கு அடங்கி இருந்த காலத்தில் வந்தார் அமிர்தலிங்கம்.

கலைஞர் போஸ்டர் ஓட்டினார், ஆனால் ராம்சந்தர் கார் அனுப்பி அமிர்தலிங்கத்தை ஏர்போர்ட்டிலே தூக்கினார்.

இதிலிருந்துதுதான் 1983ல் இருந்துதான் ஈழ அரசியல் இங்கு தொடங்கியது, பயிற்சிகாக் 4 கோஷ்டி இந்தியா வந்தது தமிழகம் மற்றும் டேராடூனில் பயிற்சி கொடுக்கபட்டது, இலங்கை திரும்பியதும் மற்ற கோஷ்டிகளை ஒழித்துவிட்டு பிரபாகரன் ஏக போக சக்கரவர்த்தியானான்

இதில் இன்னும் ஏராளம் வரும் சுருக்கமாக சொன்னால் பிரபாகரனை அமெரிக்கா வளைத்துபோட்டு ஆட்டத்தை ஆரம்பித்தது.

அமெரிக்கா என்றால் யாரெல்லாம் வருவார்கள்? தமிழக அல்ட்ராசிட்டிஸ் எல்லாம் அமெரிக்க அடிமை அல்லவா? முதலில் ராமசந்திரனும் பிரபாகரனும் கோர்க்கபட்டார்கள் ஒரு கட்டத்தில் ராம்சந்தர் நழுவினர் பின் மறைந்தார்.

அதன் பின் முரசொலிமாறன் தோளில் கைபோட்ட புலிகள் திமுகவின் நண்பர்களாயினர், வழிகாட்டல் எல்லாம் மேற்குலக சக்தி.

பிரபாகரன் இந்தியாவினை எதிர்க்கின்றார், திமுகவும் டெல்லியினை எதிர்க்கின்றது ஆக தனி தமிழ்நாடு அகண்ட தமிழ்நாடாக மலரட்டும் என்ற கோணமெல்லாம் இதில்தான் வந்தது.

இதற்கு ஒரு செக் வைக்கவும் திரிகோணமலை இந்திய வசமாகவும் இந்திய ராணுவம் அனுப்பபட்டது அதை சிங்கள அமெரிக்க துணையோடு புலிகள் விரட்டினர்.

வைகோ திமுகவில் இருந்ததாலும் இயல்பாகவே வைகோ இந்திய எதிரி என்பதாலும் புலிகளுக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருந்தது இதில் திகவும் சேர்ந்தது.

அந்நாளைய தேசியவாதி பழ.நெடுமாறன் பின்பு இதில் இணைந்தது சோகம்.

சொந்த நாட்டு அமைதிபடையினையே தனக்காக எதிர்த்த கருணாநிதியும் தமிழகமும் தன்னை கைவிடாது என நம்பிய பிரபாகரன் ராஜிவ் கொலைக்கு துணிந்தான், அதன் பின்னும் தமிழகம் தன்னை காக்கும் என நம்பினான்.

ராஜிவ் கொலைக்கு பின் தமிழகத்தில் கலவரம் வரும் கஷ்மீர் போல் நெருக்கடி வரும் அதில் சிக்கும் இளைஞர்கள் ஆத்திரத்தில் புலி கோஷ்டியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவனிடம் இருந்தது.

ஆனால் கருணாநிதி அதன் பின் விலகினார், வைகோ தனிகட்சி தொடங்கி ஆதரித்தார்.

ஜெயா எக்காலமும் புலி எதிரியே, அவரும் சோ ராமசாமியும் புலிகளின் ஹிட் லிஸ்டில் இருந்தனர், ராஜிவ் கொலைக்கு பின் புலிகள் பம்மியதால் தப்பினர்.

1997ல் ஆனையிறவில் புலி வென்று ஈழம் அமைக்க முயன்றபொழுது வாஜ்பாய் அரசு உறுமியது வைகோ திமுக எல்லாம் வாய் பொத்தியது, அதில் மிகவும் சோர்ந்தான் பிரபாகரன்.

அதன் பின் அவனின் திட்டம் தமிழ்க சினிமாக்காரர்களை வளைத்து தமிழ்நாட்டில் புதிய வகையில் ஆதரவு திரட்டுவதாக இருந்தது, 1999ல் அந்த முடிவுக்கு வந்தான்.

தமிழக சினிமா கோஷ்டிக்குள் புலி பணம் வந்தது, ஐரோப்பிய ஈழதமிழர் என புலிகள் சினிமா தயாரித்தனர், அந்த தொடர்பிலே தமிழக சினிமா கும்பல் காவடி எடுத்து இலங்கைக்கு ஓடியது.

மணிரத்னம் சுஜாதா கமல் ரஜினி தவிர எல்லா பயலும் சென்றதாக குறிப்பு உண்டு, நடிகைகள் யாரும் செல்லவில்லை. அவ்விஷயத்தில் பிரபாகரன் கவனமாய் இருந்தான்.

ராஜ்கிரண், மகேந்திரன் என பலரும் சென்றது அப்பொழுதுதான், சேரனை வளைத்துபோட புலிகள் முயன்றனர் லாவகமாக தப்பினார் அவர்.

இக்கோஷ்டியில் பாரதிராஜாவோடு சென்றான் சைமன், அவன் புலிகளுக்கு சினிமா பாடமே நடத்தினான், உண்மையில் அவன் யாரென்றே பிரபாகரனுக்கு தெரியாது.

பின் சில புலிகளை பிடித்து நான் தம்பி என அண்ணன் கதை எடுத்தேன், தமிழ்படம் எடுத்தேன் அண்ணனை பார்க்காவிட்டால் போகமாட்டேன் என ஒரே அடம்.

பின் பிரபாகரனை காண ஏற்பாடாயிற்று, அதுவும் புலி சீருடையில் பிரபாகரனுடன் நிற்பேன் என அடம் பிடித்திருக்கின்றார் அதெல்லாம் முடியாது என ஒரு படம் மட்டும் எடுத்தார்கள், சந்திப்பு நடந்தது 2 நிமிடமே.

இப்பொழுது சைமன் அள்ளிவிடும் கதை எல்லாம் அடிமட்ட புலிகளிடம் இவர் ஒட்டு கேட்டது.

அப்பொழுது சைமன் இன்னொரு காரியமும் செய்தான் அது புலிகள் உடையில் படம் எடுத்தது இன்னும் பல ஆயுதங்களுடன் போஸ் கொடுத்தது.

ஆனால் மேல்மட்ட புலிகள் அந்த படங்களை அனுமதிக்கவில்லை என்பதால் சோகமாக பிரபாகரன் படத்தோடு திரும்பினான்.

அத்தோடு 2006ல் யுத்தம் வெடிக்க ஈழகதவு மூடபட்டு புலிகளும் கொல்லபட்டனர்.

புலிகள் செத்தபின் புலிகளின் கோடிகணன்னான சொத்துக்கு சண்டை வந்தது அக்கோஷ்டிதான் பிரபாகரன் வந்தால் சொத்துக்களை தருவோம் என சொல்லிகொண்டிருப்பது அக்கோஷ்டிக்கு கணக்கு எழுத சீமான் மூலம் தமிழக எழுச்சிக்கான செலவு என எழுத சைமன் கிடைத்தான்.

அதன் பின் சைமனை சசிகலா கணவன் நடராஜன் வளைத்தார், திமுகவுக்கு எதிரான அம்பாக மாறினான் சைமன்.

பின் வைகுண்டராஜன் வளைத்து விஜயகாந்துக்கு எதிராக நிறுத்தினார், வடுக வந்தேறி கோஷம் அப்பொழுது வந்தது.

இந்திய உளவுதுறையும் அவனை சீண்டி விட்டு ஆடியது.

இப்படி யார் காசு கொடுக்கின்றார்களோ அவர்களுக்காக குரைத்த சைமன் இப்பொழுது யாருக்கு குலைப்பது என தெரியாமல் குழம்பி புலிகளை முனியாண்டி விலாஸ், மிலிட்டரி ஹோட்டல் அளவுக்கு சொல்லிகொண்டிருக்கின்றார்

இதனால் உச்ச மகிழ்ச்சியில் இருப்பது ராஜபக்சேவும் கோத்தபாயாவுமே, அவர்கள் விரும்பியது இதனைத்தான்.

ஆம் சீமானின் அல்ட்ராசிட்டியால் வைகோ, மணி, நெடுமாறன் போன்றவர்கள், பண்ருட்டி ராமசந்திரன் போல நேரடியாக புலியுடன் பழகியவர்கள் எல்லாம் அமைதியாய் ஓரமாய் நிற்கின்றார்கள் அல்லவா, இதுதான் சிங்களன் எதிர்பார்ப்பு

இந்திய உளவுதுறை எதிர்பார்ப்பும் அதுவே.....

1 comment: