ராஜபக்சர்கள் முழங்கும் தேசப்பற்றானது போலியானது என்றும் இந்நாட்டினை இரண்டாக உடைத்து, தமிழீழக் கொடியினை ஏற்றி ஈழப் பிரகடனம் செய்து வைத்த வரதராஜப்பெருமாள் இன்று தோத்தபாய ராஜபக்சவின் மடியில் செல்லப்பிள்ளையாகவுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் பாரளுமன்ற உறுப்பினர் விஜித முனி சொய்சா.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டநாள் உறுப்பினரான விஜிதமுனி சொய்சா 2015ம் ஆண்டு மஹிந்த தோற்கடிக்கப்பட்டவுடன், இப்போது மஹிந்த செத்தபிணம், செத்த பிணத்தை வீட்டிற்குள் வைத்திருப்பதில்லை தூக்கி எறியவேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை தெரிவித்து ராஜபக்சர்களின் பலத்த ஆத்திரத்திற்கு உள்ளாகியிருக்கின்றார். அவர் தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியின் மேடைகளில் ராஜபக்சர்களுக்கு எதிரான பலத்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல்பிரச்சார மேடையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் மேலும் பேசுகையில்:
நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காக 40 வருடங்கள் தொடர்ச்சியாக உழைத்து அக்கட்சியின் உபதலைவர் பதவியை எட்டியிருந்தேன். ஆனால் இந்நாட்டின் பிக்குளை அறுந்தலாவையில் வெட்டிக்கொன்றொழித்து, பின்னர் தலதா மாளிகை மீது தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதியான கருணாவை மஹிந்த ராஜபக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராக்கினார். இவர்கள்தானா இந்நாட்டை நேசிக்கின்றவர்கள்? இதுதானா இவர்களது தேசப்பற்று என்று கேட்டார்.
மேலும் இன்று இஸ்லாமிய தீவிரவாதத்தை தூக்கிக்கொண்டு திரிகின்றனர். ஏப்பரல் 21 ம் திகதி இந்நாட்டில் ஏற்பட்ட மிலேச்ச பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து காப்பாற்ற நாட்டை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்கின்றனர். இங்கே இருக்கின்ற றிசார்ட் , ரவூப் ஹக்கீம் தொடர்பாக பேசுகின்றனர். அவர்களை மதவாதிகள் என்கின்றார்கள். நான் ராஜபக்சர்களின் முகாமில் வளர்ந்தவன். அன்று றிசார்ட் பதுயுதீன் பசில் ராஜபக்சவை 'பசில் ஐயா (அண்ணே)' என்றுதான் அழைப்பார். அப்போது அவர்கள் அண்ணன்-தம்பி, இப்போ அவர்கள் எதிர் அரசியலுக்கு வந்துவிட்டால் மதவாதிகளாம் என்றார்.
No comments:
Post a Comment