Wednesday, November 6, 2019

கோத்த வெல்வது உறுதி... தீர்க்கதரிசனம் சொல்கிறார் பிமல்!

இம்மாதம் 16 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றால், சுமார் 40 இற்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள் என, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ பிரதமரானதும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அவருக்கு ஆதரவளிக்கமுன்வந்ததாகவும், மற்றொரு குழு அவருக்கு ஆதரவாக முன்வந்தபோது, அவர்களுக்கு பணத்தைக் காட்டி அவர்களை நிறுத்தியதாகவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டுகிறார்.

பிமல் ரத்நாயக்கவும், துன்னெத்தி இருவரும் இருக்கும்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அவர்களிடத்து வந்து ஆதரவளிக்கவிருந்தவர்களை பணம்கொடுத்து அவ்வாறு செய்யவேண்டாம் எனக் குறிப்பிட்ட செய்தியைச் சொன்னதாகவும் பிமல் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாற்பது பேரை பணம் கொடுத்து மிகவும் கஷ்டத்துடன் நிறுத்திவைத்திருப்பதாகவும் , இன்னும் சில நாட்களுக்குப் பிறகு 70 பேருக்குப் பணம் கொடுக்க வேண்டிவரும் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய அமைச்சர் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment