Wednesday, November 27, 2019

நம்பவைத்து கொலை செய்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவனே! ஸ்ரான்லி ராஜன்

கொஞ்சம் யோசித்தால் பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை. அவர் வாழ்வு முழுக்க அதுதான் காணகிடக்கின்றது. தனக்கு தேவையென்றால் ஒருவரை அணைப்பதும் , அவருக்கும் தனக்கும் பகை வந்தால் அதனை உறவாடிகொண்டே அவரை கொல்வதும் பிரபாகரனுக்கு கை வந்த கலை. யாரை தன்னை நம்ப வைப்பாரோ அவர்களை கொல்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவரே.

முதலில் ஈழதமிழக அரசியவாதிகளின் எடுபிடியானார், அவர்கள் துரோகி தூண்டிவிட்டதில் ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழரை கொன்று கணக்கை தொடங்கினார். பின் அதே தமிழ்தலைவர்கள் பிரபாகரனை ஒதுக்க தொடங்கியபொழுது அவர்களையும் கொன்று கணக்கை சரியாக்கினார்.

செட்டி தனபாலசிங்கம் எனும் கொள்ளையனுடன் வங்கிகொள்ளை எல்லாம் அடித்தார், பின்பு செட்டி தன்னை பயன்படுத்தினான் என அவனுக்கும் சூடு.

குட்டிமணி குழு இவரை ஆரம்பத்தில் இருந்தே ஒருமாதிரி கையாண்டதால், அவர்கள் சிறையில் இருக்கும்பொழுதே பெரும் கலவரத்தை ஏற்படுத்தி மொத்தமாக சங்கு ஊதபட்டது.

இப்படித்தான் ஆரம்பத்தில் இருந்தே யாரையாவது தனக்கு பயன்படுத்திகொள்வதும், பின் அவர்களை கொல்வதுமாகவே அவரின் நடவடிக்கை இருந்தது

அவரிடமிருந்து உயிர்தப்பிய முதல் நபர் தமிழக ராமசந்திரன், ஆம் "முதலில் தம்பி நீ சண்டையிடு, இந்திய பயிற்சிக்கு வா" என சொன்னதும் அவர்தான், பின் ராஜிவ் தலையிட்டவுடன் ஒதுங்கியதும் அவர்தான்

ராமசந்திரன் மத்திய அரசுக்கு பயந்து ஒதுங்கியதும், பிரபாகரனை சென்னையில் காவலில் வைத்ததும் பிரபாகரனுகு சினமூட்டிய விஷயங்கள்

கொஞ்சகாலம் இருந்திருந்தால் குண்டு ராமசந்திரனுக்குத்தான் வெடித்திருக்கும்

(இந்தியா அவருக்கு தொடக்கதில் இருந்தே பிடிக்காத நாடு, இந்தியா தான் ஒதுங்க இடம் கொடுத்தால் போதும் மற்றபடி ஈழவிவகாரம் பற்றி பேசகூடாது என்பதுதான் அவர் கொள்கை

ஆனால் சிங்களனிடம் அவர் தோற்றுகொண்டிருந்த காலங்களில் சில பயிற்சிகளுக்காகவும், சக இயக்கங்கள் வளர்ந்துவிட கூடாது என்பதற்காகவும் வந்தார்.

சக இயக்கம் வளர்ந்துவிட்டால் அது தனக்கு ஆபத்து என்ற ஒற்றை காரணமே அவர் கடைசியாக வந்து வெறுப்பாக கலந்துகொள்ள காரணம்.

பின் மிக சரியாக சக இயக்கங்களை ஒழித்து, ராஜிவினை கொன்று இந்தியாவினையும் ஈழ விவகாரத்தில் இருந்து விரட்டினார்

மற்றபடி மக்களை பற்றியெல்லாம் அவர் ஒருகாலமும் கவலைபட்டதே இல்லை, ஈழ எதிர்காலம் , மக்களின் வருங்காலம் பற்றி எல்லாம் சிந்தனை இல்லை )

அதன் பின் அவரின் மனதில் இருந்த அந்த மிருகம் மறுபடி விழித்தது

அதன் பின் பிரேமதாசா அமைதிபடைக்கு எதிராக ஆயுதம் கொடுத்தபொழுது பிரேமதாச பிரபாகரன் நட்பு உருவானது, ஆனால் அமைதிபடை வெளியேறியதும் பிரேமதாசவிற்கும் ஒரு குண்டு

இதன்பின் இந்தியா, சிங்களம் என யாருமே பிரபாகரனை நம்ப தயாராக இல்லை, நம்பிய எல்லோரும் கையினை சுட்டுகொண்டு ஓடிவிட்டனர். அவரை நம்ப ஒருவரும் இல்லை

இவ்வளவிற்கும் வடமாராட்சியில் பிரபாகரன் உயிர்காத்தவர் ராஜிவ்காந்தி , பல இடங்களில் பிரபாகரன் உயிரை காத்தவர் மாத்தையா, அமைதிபடை காலங்களில் ஆயுதமாக கொடுத்து அவரை காப்பாற்றியவர் பிரேமதாச‌

பிரபாகரனின் விருப்பம் மேற்குநாடுகளுக்கு சென்றது

அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு ரகசிய பிணைப்பு இருந்தது, அது அமைதிபடை காலத்திலே இருந்தது

வழக்கம் போல் நார்வே குழு, அது இது என மேற்குநாடுகளை பயன்படுத்தி சில காரியங்களை சாதித்துகொண்டிருந்த பிரபாகரனுக்கு சிக்கல் பின்லேடன் வடிவில் வந்தது

பின்லேடனின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்கு நாடுகள் களமிறங்கி, உலகளாவிய தீவிரவாத வலைபின்னலை கண்டறிந்தபொழுது பிரபாகரனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் முட்டி கொண்டது

ஈழ அரசியல்வாதி முதல் இந்தியா, ராஜிவ், பிரேமதாச, மாத்தையா என எத்தனையோ பேரினை தனக்கு தக்க உபயோகித்துவிட்டு கொன்ற பிரபாகரனால் மேற்கு நாடுகளிடம் வெல்ல முடியவில்லை.

இறுதியாக ஆண்டன் பாலசிங்கம் மூலம் இரு வாய்ப்புகளை கொடுத்துவிட்டனர், கருணாவும் அப்போது உடனிருந்தார்

அவர்கள் இரு வாய்ப்பினை கொடுத்தார்கள், ஒன்று சாக வேண்டும் அல்லது கிடைக்கும் அதிகாரத்தை எடுத்துகொண்டு ஆயுத ஒப்படைப்பு செய்ய வேண்டும்

பிரபாகரன் முடியாது என சொல்லி கொதிக்க, ஆண்டன் பாலசிங்கம் அமைதியானார், கருணா பிரிந்தே ஓடினார்

வழக்கம் போல தன் தந்திர வித்தையினை மேற்கு நாடுகளிடம் காட்ட நினைத்த பிரபாகரனுக்கு மண்டையில் விழுந்தது கொத்து. ஒரு நாடும் ஏன் என கேட்கவில்லை.

ஆயிரகணக்கான மக்கள் அழிந்தாலும் பிரபாகரன் தப்பிவிட கூடாது என்பதிலே உலகம் கவனமாக இருந்தது

ஆக பிரபாகரனை மாவீரன் என்றெல்லாம் சொல்ல முடியாது, தந்திரக்காரன் என்று வேண்டுமானால் சொல்லலாம், அதுதான் உண்மை

பிரபாகரனை நினைத்தால் ஒரே ஒரு வருத்தம்தான் உண்டு

ஏறகுறைய தன்னை நம்பிய அல்லது தன்னை பயன்படுத்த நினைத்த எல்லோரையும் கொன்றுவிட்ட பிரபாகரன் இந்த தமிழக அரசியல்வாதிகளை ஏன் விட்டுவிட்டு செத்துவிட்டார் என்பதே அது.

தன்னை யாரும் பயன்படுதுவதை ஒரு காலமும் அவர் விரும்பியதில்லை, அப்படி செய்தால் அவர்களுக்கு சாவுதான்

கொஞ்சகாலம் இருந்திருந்தால் சைமனை எல்லாம் உருதெரியாமல் அழித்திருப்பார் பிரபாகரன் .

கடைசி காலங்களில் தமிழகம் தன்னை காப்பாற்றும் என நம்பினார், இயக்கத்தை அழிய தமிழகம் விடாது, தமிழக அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் என முழுக்க நம்பினார்

ஆனால் அது நடக்காமல் போனதில்தான் தமிழக போலி அரசியல்வாதிகள் கொடுத்த போலி வாக்குறுதி அவருக்கு விளங்கிற்று, தமிழகத்தில் பெரும் எழுச்சியினை ஏற்படுத்துவதாகவும், பிரபாகரனுக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அவரை நம்ப வைத்தது இவர்கள்தான்.

தமிழக ஈழ‌ அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் தன்னை ஏமாற்றி இருக்கின்றார்கள் என்பதை முள்ளிவாய்காலில்தான் உணர்ந்தார்.

கொஞ்சம் அவகாசம் இருந்திருந்தால் இந்த அழிச்சாட்டிய கும்பலை எல்லாம் கொன்றுவிட்டுத்தான் செத்திருப்பார்

விதி அதுவல்ல என்பதால் தன் பெயரை பாவித்தும், தனக்கு தவறான வழிகாட்டி சாகவிட்டு அதில் அரசியல் செய்யும் இவர்களை எல்லாம் கோபத்துடன் நரகத்திலிருந்து பார்த்துகொண்டிருக்கின்றார்,

எத்தனையோ உதவிகளை செய்தவர்களை எல்லாம் கொன்றவருக்கு இந்த தமிழக திடீர் ஈழ அழிச்சாட்டிய அரசியல்வாதிகள் எல்லாம் தூசு.

இவர்களை விட்டுவிட்டோமே என்று அவரின் ஆன்மா சீறிகொண்டே இருக்கும்

தமிழக தலைவிதி என்று நல்லதாக இருந்தது? ஒருகாலமும் இல்லை.

மாத்தையா



அவரின் இயற்பெயர் மகேந்திர ராஜா. 1980களில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தார்

அந்த இயக்கத்து தளபதிகளுக்கு ஒரு பலவீனம் இருந்தது அது 2009 வரை இருந்தது அதாவது பிரபாகரனுக்கு அடுத்து யார் எனும் போட்டி அது

அன்று பிரபாகரனுக்கு அடுத்து கிட்டு இருந்தான், கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் மோதல் நடந்த நிலையில்தான் கிட்டுவின் கால் போனது. அது அந்த இயக்கத்தின் உள்மோதல் என்பதால் பொத்திகொண்டிருந்தார்கள்

கிட்டு ஒரு சிங்கள வீரனின் காலை நல்லூர் கந்தசாமி கொவில் முன் தொங்கவிட்டிருந்தான், தன் வீரத்தை காட்டினானாம், இது தெய்வ நிந்தனை என்றதை அவன் செவிகொடுத்து கேட்கவில்லை

பின் அவன் காலே போனது தெய்வத்து தண்டனை

கிட்டுவின் கால் மாத்தையாவால் போனது அவனுக்கு கட்டளையிட்டது பிரபாகரன் என்பதெல்லாம் அக்கால செய்திகள்

மாத்தையா அதன் பின் பெரும் இடத்துக்கு சென்றான் யாழ்பாணம் அவன் கையில் இருந்தது, ஈழ மோதலில் அமைதிபடையுடன் மோதி பிரபாகரனை காத்தவன் அவனே

ஆனால் அவனுக்கு ஒரு பலவீனம் இருந்தது, சண்டை என்றால் சண்டை மாறாக அமைதிபடையினர் பேசினால் அதையும் கேட்பான்

அமைதிபடையினரும் இந்திய உளவுதுறையும் இதை வைத்து ஆடின, எல்லாம் பாரதத்தில் கண்ணன் நடத்திய நாடகமே

கண்ணன் விதுரனிடம் சாதாரணமாக பழகி அது துரியன் கண்ணில்படும் படி பார்த்துகொள்வான், துரியன் கொள்ளும் சந்தேகத்தில் விதுரர் வெளியேறுவார், பலமிக்க விதுரரை அப்படி பிரிப்பான் கண்ணன்

இதையே இந்தியா செய்தது மாத்தையாவுடன் சகஜமாக பழகினார்கள் அவனும் அமைதிபடையினை நோட்டம் விட பழகினான் ஆனால் இந்த பழகலை பிரபாகரனுக்கு இந்திய தரப்பே போட்டு கொடுத்தது

கிட்டு இதை கொண்டு மாத்தையாவினை பழிவாங்க எண்ணினான், பிரபாகரனை கொல்ல ரா முயற்சித்ததாகவும் பிரபாகரன் காரில் குண்டு வைத்ததாகவும் குற்றசாட்டு கூறபட்டது

இக்காலகட்டத்தில் ராஜிவ் கொலை என அமளிதுமளி இருந்ததால் இவை எல்லாம் மெல்லதான் கசிந்தன‌

சந்தேக பிராணியான பிரபாகரன் மாத்தையாவினை சிறை வைத்தான் பின் மாத்தையா படையினர் 300 பேரோடு அவனை கொன்றான் பிரபாகரன்

மாத்தையாவினை தன் கையாலே சுட்டுகொன்றான் பிரபாகரன், இவ்வளவுக்கும் பலமுறை பிரபாகரன் உயிரை காத்தவன் மாத்தையா

300 வீரர்களுடன் மாத்தையா செத்தான், ஆம் அவர்களும் தமிழர்கள். பிரபாகரன் தமிழரை கொல்ல லைசென்ஸ் உண்டு அல்லவா?

மாத்தையா போனபின்பு அந்த இடத்துக்கு வந்தவனே கருணா, அவனுக்கும் பிரபாகரனுக்கும் 2004ல் முட்டியது

ஒருகட்டத்தில் மாத்தையா மாதிரியும் எனக்கு துரோகம் இழைக்கின்றாய் நேரில் வா என பிரபாகரன் சொல்ல கருணாவுக்கு வியர்த்தது உண்மை புரிந்தது

அவன் இந்திய உளவுதுறையிடம் சரணடைந்தான், இந்தியா அவனை நம்பாமல் இலங்கை அரசிடமே ஒப்படைத்தது அதன் பின் நடந்த யுத்ததில் பிரபாகரன் கொல்லபட்டு கருணா அடையாளம் காட்டினான்

மாத்தையா கொல்லபட்ட விதமே கருணாவினை காப்பாற்றி பிரபாகரனை ஒழித்துகட்டியது

மாத்தையா நல்லவன், அவனை கொன்ற பாவம் கருணா வடிவில் திரும்ப வந்து பிரபாகரனை ஒழித்துகட்டியது என்பதுதான் தெய்வத்தின் தீர்ப்பாகவே இருந்தது.

No comments:

Post a Comment