சஜித் நாட்டின் ஜனாதிபதியானால் கிளிநொச்சியின் ஜனாதிபதியாக சிறிதரன் வருவார் என்பதால் எதிர்த்து வாக்களித்தோம்..
கிளிநொச்சியிலிருந்தோர் குரல்..
இலங்கையின் நிறைவேற்று அதிகாரங்கள் ஒடிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலை மக்கள் இன்னும் 12 நாட்களில் எதிர்கொள்கின்றனர். அதேதேர்தலுக்காக அரச ஊழியர்கள் தபால்மூல வாக்குகளை அளித்துள்ளனர்.
தபால்மூல வாக்களிப்பின் பெறுபேறுகள் வெளியாகியிராவிட்டாலும் வாக்காளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் பெறுபேறுகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலிருந்து வேறுபட்டதாக அமையும் என்பதை உறுதி செய்து கொள்ள முடிந்துள்ளது. எவ்வாறான மாற்றம் என்பதை வெளிப்படையாக கூறப்போனால் கடந்த தேர்தலில் அன்னப்பட்சிக்கு வாக்களித்த பலர் இம்முறை தாமரை மொட்டை முத்தமிட்டுள்ளதாக இலங்கைநெட் ன் ஆய்வு உறுதிப்படுத்துகின்றது.
இந்த மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய காரணம் யாதெனில், அரச ஊழியர் ஒருவரிடம் பேசும்போது, இவ்வாறு கூறினார்: நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிறேமதாஸ வந்தால் கிளிநொச்சியின் ஜனாதிபதியாக சிறிதரன் செயற்படுவார் என்ற ஒரே காரணத்திற்காக சஜித்தை தோற்கடிக்க அரச ஊழியர்கள் விரும்புகின்றனர். அந்த அடிப்படையில் நான் தோத்தபாய ராஜபக்சவிற்கு எவ்வித தயக்கமுமின்றி புள்ளடியிட்டேன் என்றார்.
சிறிதரன் மீதான மேற்படி விரக்தி தொடர்பாக சற்று தோண்டியபோது, நாங்கள் அரச ஊழியர்களாக சுயாதீனமாக கடமைகளை மேற்கொள்ளமுடியாத நிலைமையே இங்கு காணப்படுகின்றது. சகல திணக்களங்களின் விவகாரங்களிலும் மூக்கினை சிறிதரன் நுழைப்பதுடன் திணைக்களங்களுள் நுழைந்து திணைக்கள பிரதானிகளின் ஆசனங்களில் அவர் உட்கார்வதை ஊழியர்கள் மிக அருவருப்பாகவே பார்கின்றனர். சிறிதரன் ஒரு அரசியல்வாதி. அவனுடைய கல்வித்தரம் என்பது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தை தாண்டவில்லை. ஆனால் அவன் இங்கு காரியாலங்களுக்கு வந்து நிர்வாக சேவை உத்தியோகித்தர்களின் மற்றும் உயர் பதவிகளில் உள்ளோரின் ஆசனங்களில் உட்காருகின்றான் என ஆத்திரப்பட்ட தொனியில் பதில்வந்தது.
இவ்வாறாக சிறிதரன் மீதான அதிருப்தி சாதாரண மக்களிடையேயும் காணப்படுகின்றது. பலர் சிறிதரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சஜித் பிறேமதாஸவை ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக அவர்களது எதிராளிக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment