ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான டட்லி சேனநாயக்கவின் பேரன் வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருக்கின்றார். அவர் இத்தேர்தலில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காத நிலையில் காணப்படுகின்றார்.
இந்நிலையில் வசந்த சேனாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் இழுத்துக்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரமுகர் சுமந்திரன் தூதுசென்றுள்ளார். இவ்விடயத்தினை சேனநாயக்க வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போது, சஜித் பிறேமதாஸவின் வெற்றியானது நாளுக்கு நாள் பின்நோக்கிச் செல்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் கட்சியுடன் இணைந்து செயற்படமுடியாத நிலையிலேயே நான் உள்ளேன்.
இங்கு எனக்கு வியப்புத்தரும் விடயம் யாதெனில் என்னை கட்சியை விட்டுச் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வந்தார் என்று சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியொன்றின் கனிஷ்ட உறுப்பினர் ஒருவர் கட்சியை விட்டு வெளியேறிச்செல்லும்போது சிரேஸ்ட உறுப்பினர்கள் சென்று சமாதானம் செய்து பிணக்குகளை தீர்த்துவைப்பது அரசியலில் சர்வ சாதாரணமானது. இங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கனிஷ்ட உறுப்பினர் ஒருவர் வெளியேற முற்படுகையில் சமாதானம் பேசச்சென்றுள்ளது யார்? அவ்வாறாயின் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது..
No comments:
Post a Comment