Tuesday, November 12, 2019

சஜித் பிறேமதாஸவை நோக்கி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கேள்விகள்..

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ வை நோக்கி 15 வினாக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அவ்வினாக்களாவன :

1. இலங்கையிலிருந்து பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் புலம்பெயர்ந்ததற்கும் அவர்கள் இன்றும் நாட்டின்மீது தீராத வைராக்கியங்களுடன் இருப்பதற்குமான காரணம் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதிகளால் திட்டமிடப்பட்டு யாழ் நூலகத்தை எரித்தமையும் 1983 கறுப்பு ஜூலை கலவரங்களை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டமையும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

2. 1980 களில் வெடித்த ஜேவிபி கிளர்ச்சியின்போது மேற்கொள்ளப்பட்ட நீதிக்கு புறப்பான கொலைகளுக்கும் அக்காலகட்டத்தில் உருவெடுத்த பல்வேறுபட்ட ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட அட்டூளியங்களுக்கும் (வெள்ளைவேன்கட்தல்கள் அடங்கலாக) தங்களது தந்தை ரணசிங்க பிறேமதாஸவே பொறுப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றீகளா?

3. தங்களுடைய தந்தையார் 700 அப்பாவி பொலிஸாரை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு புலிகளிடம் சரணடையுமாறு கட்டளையிட்டார் என்பதையும் அதனூடாக நிராயுதபாணிகளான 700 பொலிஸாரையும் பட்டப்பகலில் புலிகள் சுட்டுக்கொண்டார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றீகளா?

4. இலங்கையில் சமாதானம் நிலவியபோது உங்களுடைய தந்தையார் புலிகளுக்கு கொள்கலன்களில் ஆயுதங்களை வழங்கினார் என்பதையும் அதே ஆயுதங்களை கொண்டே அவருடைய ஆட்சிக்காலத்திலேயே எமது படையினரை புலிகள் கொன்றார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றீகளா?

5. சிலவேளைகளில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் நீங்கள் தங்களது தேர்தல் பிரச்சார மேடைகளின் முழங்குவதுபோன்று தங்களுடைய தந்தையாரின் செயல்முறைகளையே பின்பற்றப்போகின்றீர்களா?

6. தாங்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் வழங்குகின்ற உறுதிமொழிகளுக்கும் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்குமிடையே பாரிய முரண்பாடு காணப்படுகின்றது. அவ்வாறே தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 மொழிகளிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றது. இது தொடர்பான தங்களது விளக்கம் யாது?

7. வடகிழக்கு சகோதர சகோதரிகளை தங்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன:
அ. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் யாப்பை மீறும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளீர்களா?
ஆ. தங்களுக்கு தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஏதாவது ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளீர்களா?

8. கல்வி மற்றும் பொருளாதார புரட்சியில் நம்பிக்கை கொண்டுள்ள காரணத்தால் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்கான தலமைத்துவத்தை வழங்க அவரிடம் கல்விசார் பின்புலம்மொன்றுள்ளது. ஆனால் தங்களுடைய முகாமிலுள்ளவர்களே தங்களது கல்வித்தகைமையை கேள்விக்குட்படுத்துகின்ற காரணத்தினால் மக்கள் பெரிதும் சந்தேகம் கொண்டுள்ளனர்:
அ நீங்கள் உண்மையில் க.பொ.த (சஃத) , (உஃத) என்பவற்றை சித்தியடைந்துள்ளீர்களா? தங்களிடம் ஏதாவது பட்டமொன்றுள்ளதா?
ஆ அவற்றின் மூலப்பிரதியை மக்களுக்கு காண்பிக்க முடியுமா?

9. நீங்கள் வெல்லும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பீர்களா?

10. பிணைமுறி மோசடி நடந்தது என்பதையும் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பு என்பதையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

11. நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் ரவி கருணாநாயக்க , மங்கள சமரவீர , ரவூப் ஹக்கீம் மற்றும் றிசார்ட் பதுயூதீன் ஆகியோரை அமைச்சர்களாக நியமிப்பீர்களா?

12. ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற நாட்டின் சொத்துக்கள் விற்கப்பட்டபோது நீங்கள் அதற்கு ஆதரவாக கை உயர்த்தி அனுமதி வழங்கினீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

13. அமெரிக்க மிலேனியம் சலேன்ஞ் கோப்பரேசனுடன் (MCC) செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பதந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியபோது அந்த அமைச்சரவையில் இருந்தீர்கள் என்பதையும் அதனை எதிர்க்கவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

14. நீங்கள் ஜனாதிபதியானால் MCC , ACCA and SOFA போன்ற ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்களா?

15. உங்களுடைய அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

இத்தனை கேள்விகளுக்கும் ஆம் அல்லது இல்லை என்ற தெளிவான பதிலை கூறுவீர்களாயின் உங்களுக்கு வாக்களிக்கும் மக்களில் நானும் ஒருவனாவேன்..


No comments:

Post a Comment