அடுத்த அரசாங்கத்தில் ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க விடமாட்டாராம் ரத்ன தேரர்.
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான சட்ட நடவடிக்கையிலிருந்து தான் விலகி அமைதியாகப்போவதில்லை என்றும் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான வழக்கை நிறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ள அத்துரலிய ரத்ன தேரர் ஹிஸ்புல்லா அரசாங்கத்தில் இணைவாரா இல்லையா என்பது தெரியாது என்றும் அடுத்த அரசாங்கத்தில் அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காது என்பது மட்டும் உறுதி எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மிலேனியம் சலேன்ஞ் கோர்பறேசனுடன் செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பாக கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்காண்டவாறு கூறிய தேரர் அங்கு தொடர்ந்து பேசுகையில் :
எம்.சீ.சீ. உடன்படிக்கை சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்தை இரத்துச் செய்வது தொடர்பாக கோத்தபாய ராஜபக்ச மட்டுமல்லாது சஜித் பிரேமதாசவும் தெளிவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எம்.சீ.சீ உடன்படிக்கை சம்பந்தமாக கொண்டுள்ள நிலைப்பாட்டை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த உடன்படிக்கை நாட்டின் இறையாண்மைக்கு பெரிய அழுத்தங்களை ஏற்படுத்தும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் சரத்து முற்றாக இல்லாமல் போகும். உயிரை தியாகம் செய்தேனும் இந்த உடன்படிக்கை வருவதை தடுத்து நிறுத்த வேண்டியது எமது கடமை.
கோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச உட்பட அனைவரும் இந்த உடன்படிக்கை தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இரத்துச் செய்ய இணங்க வேண்டும். குறிப்பாக இது சம்பந்தமான சஜித் பிரேமதாச இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இதனால், தான் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த அமைச்சரவை பத்திரத்தை இரத்துச் செய்வேன் என அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அவர் ஆட்சிக்கு வந்ததும் இந்த உடன்படிக்கை அமுல்படுத்துவார் என்ற சந்தேகம் உள்ளது.
இதனால், என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு மக்களுக்கு இருக்கின்றது எனவும் ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment