Tuesday, November 5, 2019

ஹரின் பர்னாந்துவை தேடி கொடுப்பவர்களுக்கு யானை அளவுக்கு பரிசு!

சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுவை பெற்று தருவதற்காக பாடுபட்ட நபர்களுக்கு இடையில் முன்னிலையில் இருந்த அமைச்சர் ஹரின் பர்னாந்து இப்போது பிரதான பிரச்சார நடவடிக்கைகளில் செயலற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UNPயின் துணைத்தலைவராக நியமிக்க ஹரின் பர்னாந்து விடுத்த கோரிக்கையை சஜித் பிரேமதாச நிராகரித்தமையே இதற்கான காரணம் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்குவதற்கு அதிகமாக பாடுபட்ட நபராக தனக்கு UNPயின் துணைத்தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதால் அதை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த சந்தர்ப்பத்தில் தன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்றும், கட்சி செயற்குழுவின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள இயலாது என்றும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி தேர்தல் மற்றும் எதிர்வரும் பொது தேர்தலில் வெற்றிபெறும் வரை பொறுமையாக இருக்குமாறு தெரிவித்துள்ளதுடன், ஹரின் பர்னாந்து இது தொடர்பாக கலக்கமுற்ற நிலையில் பிரதான பிரச்சார நடவடிக்கையில் இருந்து சற்று விலகி செயற்படுவதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மலிக், கபீர், மங்கள மூவரும் அரங்கிற்கு வெளியே

இதற்கிடையில், சஜித் பிரேமதாசவை வேட்புமனுவுக்கு உயர்த்திய கட்சியின் பல மூத்தவர்கள் அவரது மேடையில் காணக்கூடியதாக இருப்பதில்லை. மங்கள சமரவீர, கபீர் ஹசீம், மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகிய மூவரும் இவ்வாறு பிரச்சார நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

அரங்கில் இருப்பவர்களை மட்டும் பார்வையிட்டு அவர்களுக்கு பதிலளிப்பது மட்டும் தலைமைத்துவம் அல்ல எனவும், தேர்தல் காலங்களில் மாத்திரம் கிராமங்கள் நினைவில் வரும் பாரம்பரிய சந்தர்ப்பவாத அரசியல்வாதியின் பாத்திரத்தில் நுழைவது ஒரு முடிவின் ஆரம்பம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment