இலங்கையில் அதிகாரத்தில் உள்ள புதிய அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்பின் கீழ் செயற்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களைச் சரிசமமாக மதித்து அவர்களுக்கு நீதி மற்றும் சுதந்திரத்தை வழங்கி ஒருமைப்பாட்டை செயற்படுத்தி முன்னோக்கிச் செல்லும் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் மிகவும் தெளிவாகத் தான் உரையாற்றியதாகவும், கோட்டபாய ராஜபக்ஷ தனது அரசியல் முன்னெடுப்புக்களைக் குறிப்பிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்ற போதே இந்தியப் பிரதமர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜனாபதி தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் எனக் குறிப்பிட்ட மோடி, 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை மிகக் குறைந்த கடன் திட்டத்தில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்காக 50 மில்லியன் அமரிக்க டொலர்களைப் பெற்றுத்தருவதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment