Friday, October 25, 2019

தமிழ் தேசிய கட்சிகள் இந்திய எடுபிடிகள் என்று கூறுகிறார் கஜேந்திரகுமார். வ. அழகலிங்கம்

உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்.

ஐயகோ! அம்மவோ!! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட சுரங்கப் பாதையின் மறுமுனையில் ஒளி கதிர்களைக் கண்டுவிட்டார்.

பாம்பின் கால் பாம்பறியும். உலகிற்தோன்றிய மனிதப் பிறவிகளில் தாம் தாம் இஸ்ரவேலர்களுக்கடுத்த புத்திசாலிகள் என்று இறுமாப்போடு இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களே உலகிலேயே மிகவும் இலகுவாக ஏமாற்றப்படக்கூடிய அதிசயப் பிரகிருதிகள். கடந்த 70 வருடமாகத் தமிழ் அரசியல்வாதிகளால் மேய்சுத் தண்ணிக்கு விடப்பட்ட வரலாற்றை மீண்டும் மீண்டும் நிரூபிக்க உதவியவர்கள். தந்திரமான அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் பிரயோகிக்கும் மறு செய்கை செயல்பாட்டைப் iteration process பயன்படுத்துகிறார்கள்.

அரசியல்ரீதியில் எடுப்பார் கைப் பிள்ளையும் ஏதுமறியாத அப்பாவிகளான யாழ்பாணத் தமிழர் எவரும் இன்றுவரை ஜனநாயகம்பற்றி ஒரு புத்தகமாவது வாசியாதவர்கள். ஏனெனில் தமிழிலே இன்றுவரை வரை ஜனநாயகம் பற்றி ஒரு புத்தகம்கூட எழுதப்படவில்லை. அதைப்பற்றி எவரும் கவலைப் படுவதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழுத்தமாக வலியுறுத்திக் கூறிய பேருண்மை:

„ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஐந்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்திய தூதுவர்களிடம் அனுமதி பெறாமல் மசலத்திற்குக் கூடப் போக மாட்டார்கள்.' 21.10.2019 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், அப்படிப்பட்டவர்கள் எப்படி இந்தியா தடை செய்த கோட்பாடுகளை ஒன்றிணைந்து கைச்சாத்திட்டனர என்பது தான் கேள்வி. பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்தகோரிக்கையும் இந்தியாவின் கண்காணிப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்குக்கு தெரியாமல் இந்த ஆவணம் தயாரித்திருக்க வாய்ப்பில்லை ஏன் எனில் அவர்கள் எப்பொழுதுமே இந்தியாவின் முகவராக செயல்படுபவர்கள். நாங்கள் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கேட்கும்போது கையொப்பம் போடாதவர்கள் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு கோத்தபாயவை இந்தியாவின் எண்ணத்துக்கு இழுக்கும் முயற்சிக்கு உதவியிருக்கிறார்கள. இது மீண்டும் மீண்டும் இந்தியா நலனிலேயே கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகள் அக்கறை செலுத்துகின்றனர்.

மற்றும் இந்த தேர்தல் வெறுமனவே இலங்கை சனாதிபதி தேர்தல் அல்ல இது சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடக்கும் தேர்தலே எனவும் குறிப்பிட்டுள்ளார்.'

ஜானாதிபதி தேர்தல் அறிவித்த நாள் தொடக்கம் மக்களுக்கு என்ன கூறுவது என்று பிதற்றிக் கொண்டிருந்த பவுத்த சிங்கள பேரினவாத ஏகாதிபத்திய எடுபிடி வாதிகள் இந்த தமிழர் சாகசவாதக் கோரிக்கையின் பின் மூசி மூசி தமிழ் விரோதம் கக்கத் தொடங்கி விட்டனர்.

உதித்த ஞாயிறு குண்டுவெடிப்பை அடுத்தும் நிலாவரைப் பிள்ளையார் கோவில் புத்த நாறும்பிணத்தை எரித்த ஆத்திரமூட்லாலும் உசும்பாத சிங்கள மக்கள் தமிழர் கூட்டக் கோமளிகளின் சாகசக் கோரிக்கைகளால் புத்தி பேதலித்தனர். நொவெம்பர் 17 இல் யூ.என்.பி தோற்றால் யூ.என்.பி காடையர்கள் தமிழர்களைக் கொல்லுவார்கள். பொது ஜனப் பெருமுனை தோற்றால் பொதுஜனப் பெருமுனைக காடையர்கள் தமிழர்களைக் கொல்லுவார்கள். இதற்கு முழுப் பொறுப்பும் ஒருகாலமும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் நிறைவேறமுடியாத பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சாகசவாத கோரிக்கை வைத்த தமிழ் தேசியக் கூட்டணியென்ற தமிழர்களின் இயமன்களும் அவர்களின் வாலில் தூங்கும் எந்தவிதவேட்டகமோ வேதனையோ இல்லாத மற்றய அரசியல்வாதிகளுமே பொறுப்பு.

No comments:

Post a Comment