சகல அரச ஸ்தாபனங்களிலும் வினைத்திறன் மிக்கவர்களை நியமித்து நிறுவனங்களை லாபம் பெறும் நிறுவனங்களாக்குவேன். கோத்தா
கடுவல பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் பேசும்போது பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு உரையாற்றிய அவர் கூறுகையில் :
நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் சகல அரச நிறுவனங்களிலும் வினைத்திறன் மிக்கவர்களை நியமிப்போம். அவர்களுக்கு சரியான இலக்குகளை கொடுத்து அவர்களின் செயற்பாடுகளை நெருக்கமாக மேற்பார்வை செய்வோம். நாம் எமது நிறுவனங்களை லாபம் பெறும் நிறுவனங்களாக்கவேண்டும். அதை விடுத்து அந்த நிறுவனங்களை வெளியாருக்கு விற்பனை செய்யமுடியாது.
இந்தநாட்டின்மேல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டுமாக இருந்தால் நாம் ஒரு நிலையான கொள்கைகளை கொண்டிருக்கவேண்டும். நாங்கள் சவால்களை ஏற்றுக்கொண்ட குழு. அத்துடன் அந்த சவால்களை வெற்றிகண்டவர்களும்கூட. எனவே நாட்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்கள் நாங்களே என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்சியடைகின்றேன் என்றார்.
0 comments :
Post a Comment