Thursday, October 24, 2019

தமிழீழக் கனவு ஒருபோதும் நனவாகாது... தமிழ் மக்களே கோத்தாவுக்கு வாக்களியுங்கள்! - மங்களாராம விகாராதிபதி

தமிழ் மக்கள் வீணான கனவு காணாமல் - இருட்டில் விழுந்தது போல பகலிலும் விழாமல் நல்லிணக்கமாக வாழ்வதற்காக, சமாதானத்தை வரவழைத்த யுத்தத்தைப் பூண்டோடு அழித்த ஆட்சியாளருக்கே வாக்களிக்க வேண்டும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேறுபாடின்றி - இதுவும் ஒரு சிறிய தேர்தல் எனக் கருதாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டியே சுமன ரத்ன தேரர் குறிப்பிட்டார்.

இன்று (24) ஊடகங்களை வரவழைத்து அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

புத்த தர்மத்தையும் சாசனத்தையும் உச்சாணியில் நிறுத்துவதாகவும், கோயில்களையும் தாகபைகளையும் அதிகரிப்பதாகவும் பேசுகின்ற சஜித் பிரேமதாச, எங்கள் நாட்டில் இரு கைகளும், கால்களும் இழந்த இராணுவ வீரர்களுக்காக என்னதான் செய்தார்? என வினா எழுப்பினார்.

ஒன்றுமட்டும் உண்மை... அவர் எங்கெங்கெல்லாம் புதையல்கள் இருக்கின்றனவோ அவ்வாறான இடங்களைத் தேர்ந்து விகாரைகளை நிர்மாணிக்கின்றார் என்று அம்பிட்டியே சுமன ரத்ன தேரர் குற்றம் சுமத்தினார்.

அவர் ஒருநாளாவது மங்களாராம விகாரைக்கு காலடி எடுத்து வைத்தாரா? இல்லவே இல்லை. சிறிய விகாரைகளுக்கு குறைந்தளவு ஒரு மலசலகூடத்தையாவது அவர் கட்டிக் கொடுத்தாரா? இவர் ஜனாதிபதியானதும் விகாரைகளைக் கட்டுவதாக மேடைகளில் சொல்லித் திரிகிறார்.

எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் கோத்தபாய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும். அதற்கு மூவின மக்களும் சிந்தித்து ஆவன செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com