Wednesday, October 23, 2019

கோத்தாவின் வெற்றிக்காக ஒன்றுபடுகிறது மொட்டும் ஸ்ரீசுகவும்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியீட்டுவதற்காக கூட்டுக் கமிட்டி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்தக் கமிட்டிக்கு இரு தரப்பிலிருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அக்கமிட்டியானது தினந்தோறும் ஒன்றுகூடி தேவையான முடிவுகளை எடுக்கின்றது.

மேலும் இரு கட்சிகளினதும் தொகுதிஅமைப்பாளர்களையும் இணைத்துக்கொண்டு மாவட்ட கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளதுடன், இக்கமிட்டியானது வாரத்தில் ஒருநாள் ஒன்றுகூடி அடுத்த வாரச் செயற்பாடுகள் பற்றி முடிவுகள் எடுக்கின்றது எனவும் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் மாவட்டக் கமிட்டி ஒன்றுகூடுவதற்கு முன்னர் அதனது செயற்பாடுகள் பற்றி அலசப்படும்.

இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதனால் இன்று 23 ஆம் திகதியிலிருந்து ஊடக பேச்சுக்காக ஒன்றிணைந்த ஊடக செயற்பாட்டு நிலையம் ஒன்றையும் செயற்படுத்துவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.

ராஜகிரிய பிரதேசத்தில் இந்த ஊடக நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதனது முதலாவது ஊடகப் பேச்சினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பட்டாளர் டளஸ் அழகப்பெரும மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க இருவரும் ஒன்றிணைந்து நடாத்துவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com