Wednesday, October 23, 2019

சஜித்தினால் இரண்டுபடுகிறது தமிழ்க் கூட்டணி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் அக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அக்கட்சியின் உள்ளகப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிட்டதையிட்டு, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புளொட், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகிய அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளாகச் செயற்பட்டுவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்புக்கள் முன்னர் அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்காக முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தன. ப்ளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தர்மலிங்கம் இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது, தமிழ்த் தேசிய கூட்டணி சென்ற காலப்பிரிவில் தற்போதைய அரசாங்கத்திற்குத் தேவையான முறையிலேயே செயற்பட்டு, வடக்கு கிழக்கு மக்களுடைய எந்தவொரு விடயத்திலும் கரிசனை காட்டாதிருந்து வந்தது எனக் குறிப்பிட்டார்.

கூட்டணியின் உள்ளகப் பேச்சுவார்த்தைகளில் ஆர். சம்பந்தன் மற்றும் சுமந்திரன் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அத்தியாவசியத் தேவைகளுக்கேற்பவே செயற்பட்டார்கள். தற்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறிக்கொண்டே வருகின்றார்கள். அதனால் தொடர்ந்தும் அக்கட்சியில் இருக்க முடியாது என மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com