Saturday, October 19, 2019

இலஞ்சமும் ஊழலுமற்ற வளமான இலங்கையை உருவாக்குவோம்! அட்டாளைச்சேனையில் கருத்தரங்கு

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் "இலஞ்சமும் ஊழலுமற்ற வளமான இலங்கையை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட மக்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு இன்று (19) இடம்பெற்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றபோது கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) சட்டத்தரணி எஸ்.எம்.சப்ரி ஆகியோரினால் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விழிப்புணர்வு பற்றி விளக்கமளித்து வைக்கப்பட்டது.

இதில் அமைப்பின் அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா, தேசிய ஐக்கிய ஊடவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள், பெண்கள் அமைப்புக்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலளருமான மீரா எஸ். இஸ்ஸடீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் “நான் நேர்மையானவன்” என்ற சின்னத்தை பெற்றுக்கொண்டார்என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்:

பைஷல் இஸ்மாயில்




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com