Tuesday, October 22, 2019

முகநூல் மூலம் விஜேதாசவை அவமதித்தவரை சட்டத்துறையிலிருந்தே நீக்குவதற்கு நடவடிக்கை

சட்டத்தரணி பிரதான் ஏ. ரனகல எனும் பெயருடைய ஒருவர் முகநூல் பக்கமொன்றின் மூலமாக அடிக்கடி ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை அவமதித்து சிற்சில விடயங்களை வெளியிட்டுள்ளதாக விஜயதாசவின் ஊடகச் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதனால், விஜயதாசவின் புகழ்நாமத்திற்கும் கெளரவத்திற்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு நட்டஈடாக 100 மில்லியன் ரூபா வழங்குமாறு கூறி சட்டத்தரணிசனத் விஜேவர்த்தன மூலம் சட்டத்தரணி பிரதான் ஏ. ரனகல எனும் பெயருடைய நபருக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஏ. ரணகல என்பவர் சட்டத்தரணியாக நின்று இவ்வாறான கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளமையானது சட்டத்தின் 42 (3) பிரிவின்படி மற்றும் சட்டத்தரணிகளின் சட்டக்கோவைக்கு எதிரானது மட்டுமன்றி அதியுயர் நீதிமன்றினால் முன்வைக்கப்பட்டுள்ள 56, 58, 60 மற்றும் 61 ஆம் இலக்கச் சட்டங்களை மீறியிருப்பதாகவும் பியதாச ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் அறிவித்துள்ளார்.

அதனால் சட்டத்தரணி பிரதான் ஏ. ரனகல என்பவர் சட்டத்துறைக்குப் பொருத்தமற்றவர் என்பதால் அவரை சட்டத்துறையிலிருந்து நீக்குவதற்கு தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

மேலும், இதுதொடர்பில் ஸ்ரீலங்கா பொலிஸ் இணையத்தளம் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற குற்றவியல் தொடர்பில் ஆய்வுநடாத்துகின்ற பிரிவுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com